வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட தமிழீழ தலைவரின் பிறந்தநாள் வைபவம்…. யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வு!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது பிறந்த தினமானது நேற்றைய தினம் தமிழக தாயகம் எங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்திருந்தது.
அந்நிலையில் தமிழீழ தலைவரான பிரபாகரன் அவர்களின் 69 ஆவது பிறந்தநாள் இனை நினைவு கூறும் முகமாக மேதகு என்கின்ற சொற்கள் அடங்கியதாக கேக் செய்யப்பட்டு பின்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தினை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசம் ஆனது அலங்கரிக்கப்பட்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உருவப்படத்தினையும் வைத்து குறித்து பிறந்தநாள் நிகழ்வானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.
இதன் போது இனிப்புகளையும் மாணவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு குறித்த பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடியுள்ளனர் .
அதே போல் நேற்றைய தினம் கார்த்திகை தீபத்திருநாளும் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களினால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இக் கார்த்திகை தீபத்திருநாளை கொண்டாடும் முகமாக யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த பல்கலைக்கழகத்தினை சூழ தீப சுடர்கள் ஏற்றப்பட்டு கார்த்திகை தீபம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.