Srilanka News

கொழும்பில் பாதுகாப்பற்ற ரீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கடைகள்… அச்சத்தில் ஊழியர்கள்!! முழுமையான விவரம் இதோ…

கொழும்பில் பாதுகாப்பற்ற ரீதியில் பல கடைகள் புறக்கோட்டை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது.

கடந்த 27ம் திகதி புறக்கோட்டை பகுதி இரண்டாம் குறுக்கு தெருவில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் பின்னரே இக் குறித்த செய்தியானது வெளியாகி பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

அந்த வகையில் குறித்த தீ ஏற்பட்ட கடையிலிருந்து சுமார் 22 ஊழியர்கள் மீட்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு புறக்கோட்டை பகுதியில் பல்வேறு விதமான கடைகள் நிர்மாணிப்பில் தீ பரவல் ஏற்ப்படும் ஆயின் பாதுகாப்பான மற்றும் முறைமையான அமைப்பு இல்லை எனவும் மற்றும் அவசர நிலையின் போது முறையாக வெளியேறுவதற்குரிய அமைப்புகளும் இல்லை என தீயணைப்பு பிரிவினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

மற்றும் இவ்வாறான பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் குறித்த கட்டிடங்களில் இருந்து வெளியேறுவது மிகவும் சுலபமானதன்று என தீயணைப்பு படையினர் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இந் நிலையில் குறித்த தீ விபத்தின் போது நான்காவது மாடியில் இருந்த ஊழியர்கள் வெளியேருவதற்கு கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தீ விபத்தில் சிக்கிய நபர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள்.

மற்றும் இவ்வாறு பல கடைகள் அவசர நிலைகளின் போது வெளியேறுகின்ற பாதுகாப்பான வழிகள் எதுவும் இல்லை எனவும் குறித்த விபத்தின் போது ஓரிரு நிமிடங்கள் கடந்து இருக்குமாயின் பலர் இறந்திருப்பர் எனவும் அறிய கூடியதாக இருக்கின்றது.

மற்றும் பல்வேறான கடைகளில் இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றதாகவும் தெரிகின்றது.

குறித்த பகுதியில் பணி புரிகின்ற கடை ஊழியர்கள் இது குறித்து கூறியதாவது;

இரவு நேரங்களில் பல ஊழியர்கள் கடைகளில் உள்ளே தாங்குவதாகவும் மற்றும் கடை உரிமையாளர்கள் தங்களை பூட்டிவிட்டு சென்று விடுவதாகவும் அடுத்த நாளே கடை திறக்கும் வரை பாதுகாப்பாக அற்ற நிலையில் இவர்கள் தாங்குவதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இவ்வாறு கொழும்பில் பாதுகாப்பற்ற ரீதியில் பல்வேறு கடைகள் அமைக்கப்ப்பட்டு இருக்கின்றது

Related Articles

Back to top button