போலீஸாரினால் தகர்த்தப்பட்ட மாவீரர்களின் தூபி கொந்தளித்த தமிழ் மக்கள்…..
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் தரவையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர்கள் தூபி போலீஸாரினால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
எதிர் வரும் 27ஆம் தேதி அன்று போரினால் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்து முகமாக விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தூபியை இன்றைய தினம் வாழைச்சேனை போலீஸாரினால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
குறித்த தூபி சட்டத்திற்கு முரணான வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
மற்றும் இதனை அடுத்து இது குறித்து தொடர்பாக நீதிமன்றத்தில் அனுமதியினை பெற்று குறித்த தூபியானது போலீசாரினால் தகர்த்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் இது தொடர்பில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
வருடா வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி அன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் முகமாக விளக்குகள் ஏற்றப்பட்டு வரும் நிலையிலே குறித்த நிகழ்வினை நடத்துவதற்கு என மட்டக்களப்பில் மாவீரர் தூபி அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அகற்றப்பட்ட தூபி தொடர்பில் மக்கள் மத்தியில் சற்று சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.