Srilanka News

போராட்ட களத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்….

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து போராட்ட களத்திற்கு இன்றையதினம் அரசு ஊழியர்கள் பலரும் தயாராக இருப்பது குறித்தான தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் இடம் பெற இருப்பதாகவும் அரசு சேவைகள் சங்கம் தெரிவித்து இருக்கின்றது.

மேலும் இப் போராட்ட களத்திற்கு என்று பல்வேறு அரச ஊழியர்களும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.

இலங்கை நாடு முழுவதும் இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அரசு சேவைகள் சங்கத்தின் இணைப்பாளர் என்பவர் தெரிவித்து இருக்கின்றார்.

இதனை அடுத்து முகாமைத்துவ உத்தியோகஸ்தர்கள் மற்றும் அலுவலக சேவை மற்றும் மாகாண அரச சேவை, சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் என பல்வேறுபட்ட அரச சங்கங்களும் அரசு சங்கங்களின் அதிகாரிகளும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து தங்களுக்குரிய சம்பள உயர்வு குறித்து ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

குறித்த போராட்டம் இன்றைய தினம் நண்பகல் 12 மணி அளவில் நாடு தழுவிய ரீதியில் இடம் பெற இருக்கின்றது.

இவ்வாறு நாட்டில் அதிகரித்து வருகின்ற பொருளாதார நெருக்கடியினால் காரணமாக அதிகரிக்கின்ற விலைவாசியினால் அரச ஊழியர்களின் சம்பளமானது போதாமையாக இருப்பதன் காரணமாகவே குறித்த ஆர்ப்பாட்டமானது நடத்தப்படுகின்றது எனவும் ,

இவ் ஆர்ப்பாட்டமானது ஜனாதிபதியான ரணில் விக்ரமத்தின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதற்குரிய தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Articles

Back to top button