காலநிலை மாற்றத்தின் புதிய வகை நோய்கள் எச்சரித்த சுகாதாரத்துறை..
காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு விதமான நோய்கள் நாட்டினுள் ஏற்படக்கூடும் என தற்போது சுகாதார துறையானது மக்களுக்கு எச்சரித்துள்ளது .
இதன் அடிப்படையில் இக் காலநிலை மாற்றங்கள் காரணமாக புதிய வைரஸ் காய்ச்சல்களின் அதிகரிப்பானது எதிர்பார்க்கின்ற அளவை விட அதிகரிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் எனவும் இதிலிருந்து குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் குழந்தை நல மருத்துவர் அறிவிப்பு வழங்கி உள்ளார்.
மேலும் குறித்து கால நிலை மாற்றம் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் இறப்பை குடல் நோய்கள் வரக்கூடும் எனவும் இது குறித்து மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு மருத்துவர் மேலும் உரையாற்றும்போது தெரிவித்து இருக்கின்றார்.
தற்போது இலங்கையில் அதிகரித்து வருகின்ற புதுவிதமான நோய்களுக்கு இக் காலநிலை மாற்றமே காரணமாக இருக்கலாம் என பல்வேறுப்பட்ட வைத்தியத்துறை அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர்.
அவ் வகையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளதாகவும், மேலும் இதிலிருந்து பாதுகாக்க கூடிய வழிமுறைகளை கையாள வேண்டும் எனவும் கூடுமானவரை குழந்தைகளை இவ்வாறான நோய்களுக்கு உட்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்து இருக்கின்றார்.