இலங்கையிலும் நிபா வைரஸ் அபாயம்!! எச்சரித்த சுகாதார அமைப்பு…
இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகின்ற நிபா வைரஸ் ஆனது இலங்கையிலும் பரவுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தற்போது இலங்கை சுகாதாரத்துறை தகவலினை வெளியிட்டுள்ளது.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் நிபா வைரஸிற்கான அண்டிஜன் பரிசோதனைகள் தேவை ஏற்படும் சமயத்தில் செய்யப்படுவதற்காக அதற்குரிய கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவித்தனர்.
இவ் வைரஸ் தொடர்பாக மக்கள் எதிர்வரும் காலங்களில் அவதானமாகவும் மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுமாறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
மேலும் இலங்கையிலும் இவ் வைரஸ் குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சானது தற்போது அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.
இன்றைய தினம் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் நிபா வைரஸ் தொடர்பாக கலந்துரையாடல் இலங்கையில் இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இக் கலந்துரையாடல் மூலம் எடுக்கப்பட்ட முக்கிய நடைமுறைகளை இன்று அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டு இதிலிருந்து தப்புவதற்குரிய நடைமுறைகளை பின்பற்ற இப்போதே பழகிக் கொள்வோம்.
உலக நாடுகளில் கோவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்கள் ஏராளம் இதே போன்று இன்னும் ஒரு சூழல் ஏற்படுமாயின் பல உயிர்களை இழக்க நேரிடும் எனவே இது தொடர்பாக ஆரம்பத்தில் இருந்து எச்சரிக்கையாக நடந்து கொள்வது நாட்டின் பிரஜையாகிய எமது கடமையாகும்.
எனவே இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இப்போது இருந்தே பின்பற்றி இதிலிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்.