யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் போடப்பட்ட அதிரடி உத்தரவு…..
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தற்போது புதிய தடையொன்றினை விதித்துள்ளதாக ச. சத்தியமூர்த்தி அவர்கள் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் கடமை நேரத்தில் வைத்தியசாலை வட்டாரத்தினுள் கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை விதித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ச. சத்தியமூர்த்தி தெரிவித்துஉள்ளார் .
சுகாதார உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் நோயாளர்களை பராமரிக்கும் கடமையை ஆற்றுபவர்கள் என பலதரப்பு ஊழியர்களையும் கடமை நேரத்தில் கையடக்க தொலைபேசி பாவனையை குறித்து தடையொன்றினை விதித்துள்ளார் .
அண்மை காலங்களில் அதிகரித்து வருகின்ற வைத்தியசாலை ஊழியர்களின் அசமந்த போக்கினாலும் மற்றும் கவனக்குறைவுகளினாலும் பல்வேறுபட்டவர்கள் அவதியும் செய்திகளை அவ்வப்போது தொடர்ச்சியாக காணக்கூடியதாக இருந்தது.
அவ் வகையில் எட்டு வயது சிறுமிக்கு கணுலா மூலம் ஊசி ஏற்றப்பட்டு அச் சிறுமி இன் மணிக்கட்டுடன் ஆன கை செயலிழந்ததை தொடர்ந்து அவரது இடது கையானது மணிக்கட்டு பகுதியிலிருந்து அகற்றப்பட்டிருந்த சோகச் செய்தி இலங்கை முழுவதும் பரவியாது .
இவ்வாறான சம்பவங்கள் அரச வைத்தியசாலைகளுக்கு செல்வது குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
தாதியரின் கவனக்குறைவினாலே இச் சிறுமியின் மணிக்கட்டுப்பகுதியுடனான கை அகற்றப்பட்டதாக பல தரப்பினரும் வைத்தியசாலை நிர்வாகம் குறித்து தங்களது அதிருப்திகளை வெளியிட்டு இருந்தனர்.
இது தொடர்பாக உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து வைத்தியசாலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக அதனை நடத்திய முடித்திருந்தனர் .
தற்போது அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலை இன் தலைமை பணிப்பாளர் வேலை நேரத்தில் கையடக்க தொலைபேசி பாவனையினை தடை செய்துள்ளார்.