World

போலி வேலை வாய்ப்புகளை நம்பி கனடாவிற்கு வரும் மக்களுக்கு எச்சரிக்கை!!!

கனடாவில் வேலை வாய்ப்பு தொடர்பாக பல்வேறு விதமான மோசடி சம்பவங்கள் நடந்தேறி வருவதாக அந் நாட்டு மோசடி தவிர்ப்பு நிலையம் தனது இணைய தளம் வாயிலாக எச்சரிக்கை ஒன்று இனை விடுத்து உள்ளது.

இது கிரிப்டோ கரன்சி எனப்படும் மோசடிக்கு அடித்தளம் ஆக அமைகின்றது எனவும் தெரிய வருகின்றது.

மேலும் அனேக மக்கள் எப்படியாவது வெளிநாடு சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பல்வேறு கனவுகளுடன் இருந்து வருகின்றனர்.

இதனை ஏதுவாக எடுத்துக் கொண்டு மோசடி செய்யும் ஒரு கும்பலை இருந்து வருகின்றனர் எனவும்.

மேலும் இவர்கள் வேலை வாய்ப்பு தொடர்பான பல்வேறு விதமான கண் கவர்ச்சிக் உரிய போலி ஆன வேலை வாய்ப்பு பதிவுகளை மற்றும் பிரச்சாரங்களை செய்து வருவதாகவும் தற்போது தெரிய வந்து உள்ளது.

உண்மையில் அவ்வாறான வேலைகள் கனடிய நாட்டில் இல்லை எனவும் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும்,

தற்போது அந்நாட்டு மோசடி தவிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது .

வேலை வாய்ப்பு மோசடி ….

இணையம் மூலம் பணம் ஈட்ட முடியும் எனவும் அதனை வீட்டில் இருந்த செய்ய முடியும் எனவும் பல்வேறு பட்ட தனித்து தங்களை வேலையில் அமர்த்துவதாகவும்,

தங்களுக்கு பண உழைப்பதற்கு உரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தருவது ஆகவும் எனக் கூறி பல்வேறு பட்ட பிரச்சாரங்கள் செய்யப்படுவது ஆகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதற்கு குறிப்பிட்ட தொகையினை தங்களது கணக்கிட்டு வைப்பிலிடுங்கள் எனக் கூறி ;

அது உங்களுக்கு இரட்டிப்பான மடங்கு அதிகரிப்பு பணத்தை ஒரு சில வாரங்களிலேயே தந்துவிடக் கூடும் என்ற கவர்ச்சிகரமான பேச்சுகளின் ஊடாக மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இதனை சற்றும் உணராத மக்கள் உடனடியாக பணத்தினை அவர்களுக்கு வைப்பு உம் செய்து விடுகின்றனர்.

ஒரு சில மாதங்கள் வெகுவாக வேலைகள் நடந்தாலும் ஒரு சில மாதங்களின் பின்னரே அது ஒரு மோசடி என்றே மக்களுக்கு தெரியவருகின்றது .

இதனால் பதறியடித்து மக்கள் தொடர்பான சம்பவங்கள் உம் பதிவாகி உள்ளது.

மேலும் இவ்வாறான மோசடி கும்பல்கள் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடி சம்பவத்தினை நிகழ்த்தி வருகிறது இதனால் சற்று ஏமாந்து விடுகின்றனர் மக்கள்.

மேலும் இவ்வாறான சம்பவங்கள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் சுமார் எட்டு மாதங்களில் 32,000 மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும் அவர்கள்தெரிவித்து உள்ளனர்.

மேலும் இதன் மூலம் கடந்த ஆண்டு நடை பெற்ற இவ்வாறான மோசடி சம்பவங்கள் மூலம் ;

சுமார் 531 மில்லியன் டாலர்களை மக்கள் இதை நம்பி மக்கள் தங்களது பணங்களை இழந்து உள்ளதாகவும் விபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ்வாறான மோசடி சம்பவங்கள் ஈடுபடும் நபர்கள் முதலில் மக்களுடன் நட்புறவாகவே பழகுகின்றனர்.

அதன் பின்னரே தங்களது இலக்கான குறித்த பணத்தினை மக்களிடம் இருந்து நாசுக்காக வேண்டி விட்டு மோசடி செய்கின்றனர்.

எனவே இது குறித்து மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு மோசடி தவிர்ப்பு நிலையம் தற்போது தெரிவித்துள்ளது.

மேலும் எமது பாதுகாப்பை நாமே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான பல்வேறு மோசடி சம்பவங்கள் உலகில் நடந்தேறி வருவதினால் அதிலிருந்து சற்று கவனமாகவும் மற்றும் ஏமாறாமல் உம் நடந்து கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button