கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை கூறிய பிரபல பல்கலைக்கழகம்…
கனடாவில் கல்வி கற்கின்ற இந்திய மாணவர்களுக்கு கனடா மற்றும் இந்திய உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் பாதகமான தன்மையை ஏற்படுத்துமா என பல்வேறு தரப்பினரும் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மற்றும் இச் சம்பவம் குறித்து கனடாவில் கல்வி கற்கும் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் சற்று அச்சத்தில் இருக்கின்றனர்.
அவ் வகையில் இது குறித்து கனடாவில் உள்ள பல்கலைக்கழகமான யார்க் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தற்போது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை சர்வதேச மாணவர்களுக்கும் மற்றும் கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களுக்கும் தெரிவித்துள்ளார்.
அவ் வகையில் சீக்கிய பிரிவினவாத அமைப்பு ஒன்றின் தலைவர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதை அடுத்து கனடா மற்றும் இந்திய தூதரகங்களின் உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டு காணப்படுகின்றது.
இருப்பினும் இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள இவ்வாறான விரிசல் நிலையின் காரணமாக யார்க் பல்கலைக்கழகமானது அதனை உற்று நோக்கி வருவதாகவும்,
மேலும் கனடாவும் யாக் பல்கலைக்கழகமும் இந்தியா வம்சாவளியினை சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் எனவும் மற்றும் அவர்களது வரவை இவர்கள் மிகவும் விரும்புகின்றனர் எனவும்,
மீண்டும் உறுதியளிப்பதற்காக அவர்களுடன் தொடர்ந்து தொடர்ப்பிலும் இருப்பதாக குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்கள் கனடா வில் கல்வி கற்க ஆயத்தமாக இருக்கும் மாணவர்களும் மற்றும்,
ஏற்கனவே கனடாவில் சர்வதேச மாணவராக பயின்று கொண்டிருக்கிற மாணவர்களும் எவ்வித அச்சமும் கொள்ள தேவை இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
மேலும் பல்கலைக்கழகம் வழங்குகின்ற மாணவர்களின் உடல் நலனுக்காக கல்வி தொடர்பான ஆலோசனைகளுக்காகவும் செய்ய குறித்த பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாகவும் துணைவேந்தரான Dr Rhonda L Lenton தெரிவித்து இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.