Srilanka News

35 வயது பெண்களுக்கான கோரிக்கை இலங்கையில்!!

இலங்கையில் சுகாதாரத்துறை ஆனது 35 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது உடைய பெண்களுக்கு தற்போது அறிவித்தல் ஒன்றினை விடுத்து உள்ளது.

தற்போது நிலவி வருகின்ற அதிகரித்த புற்றுநோயின் காரணமாக பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,

எனும் நோக்கில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சர் மாநாடு ஒன்றை குடும்ப சுகாதார நல அமைச்சர் நடத்தி உள்ளார் .

இதன் போது ஒரு கோரிக்கையை இலங்கை பெண்களுக்கு அவர் விடுத்து உள்ளார் .

35 வயதினை கடந்த பெண்கள் தங்களை புற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார் .

மேலும் பெண்கள் அதிகம் ஆக வாய் புற்று நோய், மார்பக புற்று நோய், கர்ப்பப் பை புற்று நோய் ஆகிய புற்று நோய்களினால் அநேகர் இக் காலங்களில் பாதிக்கப் படுகின்றனர்.

இது குறித்து விழிப்பாக இருப்பதற்காக மேற்குறிப்பிட்ட குடும்ப நல்ல சுகாதார அமைச்சர் தங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதாரக் குடும்ப நல மையத்திற்கு சென்று,

தங்களது உடலினினை பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவ்வாறு புற்றுநோய் அறியும் இடத்தில் உடனடியாக சிகிச்சை பெற்று ,

அதிலிருந்து மீளுவதற்குரிய சிகிச்சைகளை ஆரம்பத்திலே மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இக் காலத்தில் அதிகரித்து வருகின்ற புற்று நோய் பிரச்சினையினால் பல இளம் குடும்பஸ்தர்கள் மரணித்து வருகின்றனர்.

இதனால் அவர்களுடைய குழந்தைகள் அனாதைகளாக விட்டுச் செல்லப் படுகின்றனர் எனவும் அறிய முடிகின்றது.

இதன் காரணமாக இதற்கு விழிப்பூட்டும் வகையில் சுகாதார அமைச்சர் அவர்கள் இவ்வாறு ஒரு எச்சரிக்கை ஐ 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு விடுத்து உள்ளார்.

எமது உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாகவே அனேக புற்று நோய்கள் ஏற்படுகின்றன மற்றும் முறையான ஆடைகள் அணிவதில்லை (இறுக்கமான ஆடைகள் அணிவது ) இதனாலும் புற்று நோய் வரலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் பெண்கள் கண்கள் என மதிக்கப்படக் கூடியவர்கள் எனவே அவர்களுக்கு ஏற்படக்கூடிய இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் விழிப்புணர்வு மாநாடு ஒன்று செய்யப் பட்டு உள்ளது.

Related Articles

Back to top button