பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனத்தால் நிகழ்ந்த மரணம்… இலங்கையை உலுக்கிய பாடசாலை சிறுவர்களின் மரணம்….
இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள வெல்லம்பிட்டிய – வெரகொட எனும் கனிஷ்ட பாடசாலையில் பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனத்தால் மரணச் சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது.
பாடசாலை வளாகத்தில் நீர் குழாய்க்கு என்று அமைக்கப்பட்டிருந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்ததிலே இத் துயரச் சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது.
இத் துயரச்சம்பவத்தின் போது சுமார் ஆறு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மற்றும் இவர்கள் யாவரும் சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந் நிலையிலே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவி ஒருவர் குறித்த சம்பவத்தின் போது பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் கொந்தளித்த குறித்த மாணவர்களின் பெற்றோர்களினால் பாடசாலை வளாகத்திலே பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கும் அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் குறித்த பாடசாலையின் அதிபர் ஆனவர் பாதிப்படைந்த மாணவர்களின் பெற்றோர்களினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.
குறித்து சம்பவத்துக்குரிய காரணம்….
தரம் 1 இல் கல்வி கற்கும் சுமார் ஆறு மாணவர்கள் நீர் குழாயில் கை கழுவுவதற்காக சென்றுள்ள போது குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மற்றும் குறித்த நீர் குழாயானது நீண்ட காலமாக முறையான கண்காணிப்பு இல்லாமல் இருந்ததாகவும் மற்றும் உடைந்து விழக்கூடிய நிகழும் ஓர் இடமாகவே இருந்ததாக பெற்றோர் தரப்பினர் தற்போது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
குறித்த பாடசாலை வளாகத்திலே இவ்வாறு இடம் பெற்ற குறித்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருவதோடு குறித்த பாடசாலையின் நிர்வாகம் குறித்து கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.
மற்றும் குறித்த பாடசாலை நிர்வாகத்தின் முறையான கண்காணிப்பு இல்லாமல் நீர்குழாய் ஆனது பாடசாலை வளாகத்தில் கவனிப்பார் இன்றி இருந்ததாகவும் தெரிய வருகின்றது.