தமிழர் பகுதியில் அத்துமீறி புத்தர் சிலைகள் அமைப்பு… ஒன்று திரண்ட தமிழர்கள்…
இலங்கையின் தமிழர் பகுதியில் திருகோணமலையின் – இலுப்பை குளம் எனும் பகுதியில் அத்துமீறி பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் புத்தர் சிலையானது அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் அத்துமீறி நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இடை நிறுத்தப்பட்ட பொரலுகந்த ராஜமஹா விகாரையிலே இன்றைய தினம் பௌத்தப்பிக்குகள் மற்றும் பெரும்பான்மை இன மக்களினால் சுமார் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
மற்றும் குறித்த பகுதியில் ஆரம்பத்தில் அமைக்கப்பட இருந்த பௌத்த விகாரைகள் சம்பந்தமான நிர்மாணிப்பு பணிகளுக்கு எதிராக பல தடவைகள் தமிழர்களினாலும் ,
அப்பகுதி மக்களினாலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றும் இதனை அடுத்து குறித்த திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சம்பந்தன் அவர்களும் மற்றும் குறிப்பிட்ட பகுதி மக்களும் இணைந்து குறித்த கட்டுமான பணி தொடர்பாகவும்,
அத்துமீறிய செயல்பாடுகள் தொடர்பாகவும் முறைப்பாடுகள் செய்ததன் வாயிலாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆளுநரினால் வழங்கப்பட்ட தடை உத்தரவினையும் மீறி திருகோணமலையில் குறித்த பகுதியில் தொடர்ந்து கட்டுமான பணிகள் செய்யப்பட்டு வந்ததாகவும் அதற்கு எதிராக பொதுமக்கள் 3.9. 2023 அன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்து இருந்தனர்.
இதனை அடுத்து எவ்வித அனுமதி இல்லாத நிலையில் கட்டுமான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் அது மீறி காலையில் இரண்டு புத்தர் சிலைகளும் குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்தமை,
அப்பகுதி வாழ் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவமாக இருக்கின்றது.
இருப்பினும் இது குறித்து தங்களால் இயன்ற அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் குறித்து பகுதி வாழ் மக்களினால் நடத்தப்படுகின்றது.
காலம் காலமாக தமிழர்கள் வாழ்கின்ற தமிழ் பூமியிலே இவ்வாறு இரு இனங்களுக்கும் இடையே முருகல் நிலையை ஏற்படுத்தும் விதமாகவும் ,
மற்றும் இலங்கையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் முகமாகவும் குறிப்பிட்டு சிலர் இவ்வாறு தமிழர் பகுதியில் அத்துமீறி பௌத்த விகாரைகள் கட்டுமான பணிகளை தொடர்ந்து நடத்தி வருவதாகவும்,
மற்றும் குறித்த பகுதியினை சூழ சிங்கள மக்களை குடியேற்றுவதற்குரிய திட்டங்களும் நடைபெற்று வருவதாக குறித்த பகுதியில் உள்ள மக்கள் தங்களது கவலைகளையும் வெளியிட்டு இருக்கின்றனர்.