போதை மாத்திரைகளுடன் மன்னாரில் கடத்தல் நபர் கைது…..
வடமாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தில் போதை மாத்திரைகளுடன் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்படுகின்ற சந்தேக நபர் ஆனவர் புதன்கிழமை இரவு ஒன்பது மணியளவில் போலீசாரினால் குறித்த போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றும் குறித்த நபர் ஆனவர் தாராபுரம் சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றும் குறித்த நபரானவர் தாழ்வாடு பகுதியில் இருந்து தாராபுரத்தின் ஊடாக குறித்த போதை மாத்திரைகளை கொண்டு செல்ல முற்ப்பட்ட நிலையிலே இவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
இவரது கையில் சுமார் 5210 போதை மாத்திரைகள் காணப்பட்டதாக கைது செய்யப்பட்ட போலீசார் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.
மற்றும் ராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலினை தொடர்ந்து குறித்த சந்தேக நபரானவர் குற்றப்புலனாய்வு பிரிவின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றும் குறித்த சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதை பொருள் மாத்திரைகளும் தொடர்ந்து மேலதிக விசாரணைக்காக மன்னார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ள போதை மாத்திரைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டரீதியற்ற முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தி தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.