பொருளாதார நெருக்கடியினால் இலட்சக்கணக்கில் ஆபரணங்களை அடகு வைக்கும் இலங்கை மக்கள்!! இலங்கையில் வெடிக்கவிருக்கும் அடுத்த போராட்டம்…
இலங்கையில் தற்போது வரை பொருளாதார நெருக்கடியினால் பல இலங்கை வாழ் மக்கள் பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் .
அந்த வகையில் இலங்கை மக்கள் தங்களிடம் உள்ள தங்க ஆபரணங்களை அடகு வைத்து அதன் மூலம் பணங்களை பெற்றுக் கொண்டு வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.
இந் நிலையில் இந்த வருடத்தில் தற்போது வரை சுமார் எட்டு மாத காலப்பகுதியில் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை இலங்கை மக்கள் அடகு வைத்துள்ளதாக தற்போது தேசிய தொழிற்சங்கத்தின் அழைப்பாளரான வசந்த சமரசங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகரித்த விலைவாசியின் காரணமாக அன்றாட வாழ்வில் வாழ்வாதாரத்துக்குரிய செயல்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் மேலும் சுமார் 11 லட்சம் குடும்பங்கள் தங்களது வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள இப் பொருளாதார நெருக்கடியானது அரசாங்கத்தின் உதவி இருப்பின் விலைவாசிகளின் குறைப்பு ஏற்படுமாயின் ஓரளவு இலங்கை வாழ் மக்கள் நாளாந்த வாழ்க்கையினை கொண்டு செல்வதற்கு ஏதுவாக அமையும் .
இருப்பினும் இது தொடர்பில் அரசாங்கம் இது வரையும் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை.
அத்தோடு வசந்த சமரசங்க அவர்கள் தெரிவிக்கும்போது இலங்கை மக்களுக்கு நிவாரணமாக ரூபாய் 20 ஆயிரத்தையும் வழங்க வேண்டும் எனவும் ,
அப்படி செய்தாலே ஓரளவான பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் கூறியிருக்கின்றார்.
இல்லாவிடில் இப் பிரச்சனையானது போராட்டக் களம் வரை கொண்டு செல்லப்படும் எனவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இவ்வாறு பொருளாதார நெருக்கடியினால் விலைவாசிகள் இன்னும் அதிகரிக்கும் ஆனால் நிச்சயம் முன்பு நடைபெற்ற போராட்டங்களைப் போன்று மற்றும் ஒரு போராட்டம் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.