பாடசாலை மாணவனை தாக்கிய ஆசிரியர்!! வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தாக்கப்பட்ட மாணவன்..
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பாடசாலை மாணவர் ஒருவரை அப் பாடசாலையிலே ஒன்பதாம் தரத்திற்கு பகுதி தலைவராக இருக்கும் ஆசிரியர் தாக்கிய சம்பவமானது தற்போது இலங்கையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
குறித்த ஆசிரியரானவர் அம் மாணவனை சுமார் ஒரு வாரங்களுக்கு மேலாக தும்புத்தடி மற்றும் தனது சப்பாத்து கால்களினால் கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிய வருகின்றது.
மேலும் இவ் ஆசிரியரின் இச் செயல்பாட்டின் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான அச் மாணவன் இதனை பெற்றோரிடத்தில் இருந்தும் மறைத்துள்ளார்.
மேலும் தனது மன உளைச்சல் இனை ஒரு கடிதமாக எழுதி வைத்ததாகவும் அச் சிறுவனின் பெற்றோர் தற்போது தெரிவிக்கின்றனர்.
அக் கடிதம் மூலமே குறித்த சம்பவமான பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் குறிப்பிட்ட ஆசிரியரானவர் பாடசாலையில் ஏனைய மாணவர்களையும் தாக்கிய சம்பவங்களும் பதிவாகி உள்ளதாக அப் பாடசாலை வட்டாரம் தற்போது தகவலினை தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது கடுமையாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது .
இதனை அடுத்து பெற்றோர் தரப்பினார் போலீஸ் நிலையத்தில் இதற்கான முறைப்பாட்டினை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக போலீசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறு பல்வேறு சிறுவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் காரணமாக மன உள்ளச்சலுக்கு உள்ளாகி தற்கொலைகளுக்கு முயற்சி செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பாடசாலை சிறுவர்களை பாதுகாக்கும் இடத்தில் உள்ள ஆசிரியர்களே இவ்வாறான வன்முறை சம்பவங்களை செய்வது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும்.
மேலும் குறித்த ஆசிரியருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனவும் பெற்றோர் தரப்பினர் போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறித்த மாணவனை எவ்வித காரணங்களும் இன்றி ஆசிரியர் தாக்கியுள்ளதாகவும் அம் மாணவன் போலீசாரிடம் தகவலினை தெரிவித்துள்ளார்.