அத்தியாவசிய பொருட்கள் விலை 20% அதிகரிக்கும் அபாயம்….
இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது வட் வரியின் தீர்மானமானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்த இருக்கின்றனர். இந் நிலையில் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலையானது 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் தற்போது மக்களுக்கு அறிவித்திருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் முதன் முதலாக போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படுகின்ற எரிபொருட்கள் மற்றும் தங்க நகைகள், போக்குவரத்து கட்டணங்கள், சோலார் பேனல்கள் மற்றும் தொலைபேசிகள் என்பவற்றின் விலைகள் அதிகரிக்க கூடும் என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இருப்பினும் உலக நாடுகளிலே கச்சா எண்ணெய் இன் விலையானது வீழ்ச்சி கண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தற்சமயம் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றது.
இதன் காரணமாக இலங்கை நாட்டில் எரிபொருட்களின் விலையில் பாரியளவு மாற்றம் ஏற்படாது எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
குறித்த நிபுணர்கள் குறிப்பிடுகையில் தற்சமயம் காற்று, சூரிய சக்தி குறித்தான மின்சார உற்பத்தியின் பேச்சு அதிகரிக்கப்பட்ட போதிலும் இனிவரும் காலங்களில் சோலார் பேனல் ஒன்றின் விலையானது சுமார் 2 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை பெறும் நடவடிக்கையானது கைவிடப்படும் மற்றும் இதன் காரணமாக எரிபொருட்களான நிலக்கரி ஆகிய விலை உயர்ந்த பொருட்களிடமிருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் குறித்த நிபுணர்கள் தற்சமயம் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
இதனாலே நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது சுமார் 20 வீதத்தினால் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதிக பொருளாதார நெருக்கடியின் காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு இச்செய்தியானது மிகவும் பேரிடியான செய்தியாக அமையக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வருகின்ற பொருட்களின் விலை ஆனது குறைக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் கூறினாலும் பல்வேறான கடைகளில் அவ்வாறான விலைகளில் பொருட்கள் கொள்வனவு செய்ய இயலுமாறு இருக்க முடிவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.