போதை பொருளுடன் கைதான பெண்!! யாழில் நடந்த சம்பவம்…
இலங்கையின் யாழ்ப்பான மாவட்டத்திலே வட மராட்சி பகுதியினை சேர்ந்த துன்னாலை கிழக்கு பகுதியில் போதை பொருளுடன் பெண்ணொருவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றும் குறித்த கைது நடவடிக்கையானது போலீசாருக்கு கிடைக்கப் பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் குறித்த பெண்ணானவர் சுமார் 51 வயது நிரம்பியவர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது குறித்த பெண்ணின் ஆடைக்குள் மறைக்கப் பட்ட ஹெராயின் போதை பொருளானது மீட்க்கப் பட்டுள்ளதாகவும் மற்றும் இது தொடர்பாகவே குறித்த பெண்ணானவர் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச் சாட்டின் அடிப்படையில் கைதாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் குறித்த நபரானவர் சுமார் 6 கிராம் அளவில் போதைப் பொருள் வைத்திருந்த அமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணானவர் பருத்தித்துறை நீதவான் நீதி மன்றத்தில் மேலதிக விசாரணைக்காக முன்னிலைப்படுத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.