Srilanka News

மீண்டும் இருளில் மூழ்கும் இலங்கை!!! எச்சரித்த இலங்கை மின்சார சபை…

கடந்த சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடையினை தொடர்ந்து அது குறித்தான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் மீண்டும் இருளில் மூழ்கும் அபாய நிலை இலங்கைக்கு ஏற்ப்படும் நிலை வெகு விரைவில் உண்டு என இலங்கை மின்சார சபை பொது மக்களுக்கு எச்சரித்துள்ளது .

இந் நிலையில் மீண்டும் அது போன்ற மின் தடையினை இலங்கை எதிர் நோக்க கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தற்போது தெரிவித்து இருக்கின்றது.

மற்றும் கடந்த சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் ஏற்றப்பட்ட மின் தடையானது மின்னல் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்றும் மின் விநியோகத்தின் முதன்மை பாதையில் ஏற்பட்ட நிலை மாற்றம் காரணமாகவே குறித்து மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டு இலங்கை முழுவதும் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது.

இந் நிலையில் உடனடியாக மின் விநியோக முதன்மை பாதையானது சீரமைக்கப்பட்டது.

இச் செயற்பாடு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் எதிர் வரும் காலங்களில் பொது பயன்பாடு ஆணை குழுவின் பரிந்துரைகளின் கீழ் நடைமுறைப்படுத்தாவிட்டால் அன்று நடந்தது போல் மீண்டும் இருளில் மூழ்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.

மீண்டும் இருளில்

இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் தடைபட்ட மின்வெட்டு குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

மற்றும் இதற்கென விசாரணைகளுக்காக அரச புலனாய்வு சேவை பிரிவின் தனித்த குழு ஒன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் தற்போது தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button