குழந்தைகளை விற்ற தாய்க்கு நேர்ந்த கதி…. இலங்கையை உலுக்கிய சம்பவம்!!
இலங்கை பிலியந்தலைப் பகுதியில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த தாயானவர் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு இரு குழந்தைகளையும் விற்றதாக தற்போது தகவல் வெளியாக இருக்கின்றது.
இந் நிலையில் குறித்த இரு குழந்தைகளையும் விற்ற தாய் தற்போது போலீசாரினால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
மற்றும் குறித்த இரட்டை குழந்தைகளையும் விலைக்கு வாங்கிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவமானது இன்றைய தினம் பிலியந்தலை பகுதியில் நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர் .
மற்றும் குறித்த விடயம் தொடர்பில் போலீசார் மேலும் கூறுகையில்;
தாயானவர் ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை ஒன்றினை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
மற்றும் இவர் கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் இந்த மாதம் சுமார் ஒரு கிழமைக்கு முன்னதாக இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
பின்னர் இரு குழந்தைகளையும் தலா 25000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மற்றும் இரட்டைக் குழந்தைகளில் ஒரு சிசுவை ராகம பிரதேசத்திலும் மற்றைய சிசுவை களனி பிரதேசத்திலும் வாங்கிய பெண்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .