விலைமதிப்பிட முடியாத மாணிக்க கல் …அவிசாவலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மாணிக்கம்….. வெளியான தகவல்கள்!!!!
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் விலைமதிப்பிட முடியாத மாணிக்க கற்கள் கிடைக்கப்படுகின்ற தகவல்களானது அவ்வப்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு காணப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது விலைமதிப்பிட முடியாத மாணிக்க கல் அவிசாவலை பகுதியில் காணப்படுகின்ற சுரங்கம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மற்றும் குறித்த மாணிக்கக்கல் ஆனது அதிக கோடி பெருமதியை உடையது என உயர் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனாலே குறித்த மாணிக்க கல்லின் விலையானது மதிப்பிட முடியாத வகையில் காணப்படுகிறது.
நீர்க்குமிழிகள் போன்று மின்னுவதினால் இது அதிக சிறப்பு வாய்ந்ததாகவும் காணப்படுகிறது.
இதனை தேசிய மாணிக்கம் மற்றும் நகை திணைக்களம் ஆனது ஆராய்ந்து மேற்கூறப்பட்ட விடயங்களை குறிப்பிட்டு இருக்கின்றது.
மற்றும் குறித்த மாணிக்கல்லின் உரிமையாளர் அவர்கள் இதனை இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு வழங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மற்றும் அபூர்வமான விலை மதிப்பிட முடியாத மாணிக்கலானது இலங்கை சார்பாக சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றும் இது இலங்கைக்கு பாரிய அளவில் லாபங்களை ஈட்டக்கூடிய ஒன்றாக காணப்படும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.