ராஜபக்க்ஷாக்கள் தொடர்பில் சந்திரிகா வெளியிட்டு கருத்து….
இலங்கையினை மீள முடியாத பின் தங்கக்கூடிய நிலைக்கு தள்ளிய ராஜபக்க்ஷாக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்க அவர்கள் தற்போது தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.
அவ் வகையில் இவ்வாறு நாட்டினை மோசமான நிலைக்கு தள்ளிய காரணத்திற்காக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நபர்களின் சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் இது தொடர்பில் உலக வங்கியில் குறித்த பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் மற்றும் இதற்கு வங்கியின் ஆதரவினை பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் உலக வங்கியின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற பணத்தினை வைத்து இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவ முடியும் எனவும் மற்றும் இலங்கையின் கடனை அடைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இலங்கை நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ , கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அப்போது முன்னாள் நிதி அமைச்சராக செயல்பட்டு வந்த பாசில் ராஜபக்ஷ உட்பட 7 ராஜபக்க்ஷாக்கள் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு சந்திரிகா அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
மற்றும் இவ்வாறு நாட்டிற்கு பாரிய நாட்டின் பின்தள்ளிய நிலைக்கு காரணமானவர்களின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க் கட்சி நாடாளுமன்றத்தில் இதற்கு யோசனை முன்வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.