2024 ஆம் ஆண்டு ஆரம்ப பகுதியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு உறுதி… அமைச்சர் கூறிய தகவல்…
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயல்பாடுகளில் மும்முரமாக தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றார். இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான உரிய தீர்மானமானது அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு ஆரம்ப கால பகுதியில் அதாவது முற்பகுதியிலே கிடைத்துவிடும் என தற்போது அமைச்சரான சுசில் பிரேமஜயந்த அவரகள் தெரிவித்து இருக்கின்றார்.
சமகால அரசியல் நிலவரம் பற்றி கருத்து தெரிவிக்கும் போது குறித்த அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மீதும் மற்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை மாத்திரமே முன்வைக்கின்றனர்.
மேலும் அது தொடர்பான தீர்வுகளை காண்பதற்கு அரசுடன் அவர்கள் ஒத்துழைப்பதில்லை எனவும் பகிரங்கமாக அவர் கூறியிருக்கின்றார்.
பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை அரசு முன்வைத்த பின்னர் அரசுக்கு ஆதரவு வழங்குவோம் என்று தற்போது தமிழ் அரசியல்வாதிகள் நிபந்தனையை முன் வைத்திருக்கின்றனர்.
இருபினும் அரசுடன் இணைந்து செயல்பட்டாலே குறித்து தீர்வுகளை வென்றெடுக்க முடியும் அல்லவா எனவும் கூறி இருக்கின்றார் .
ஆனால் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க அவர்கள் இலங்கை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படுகின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் செயற்பாடுகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றார்.
இந் நிலையில் தமிழ் மக்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் அடுத்து வருட ஆரம்பத்திலேயே ( 2024 ஆம் ஆண்டு ஆரம்ப பகுதிகளில்) தீர்வு கிடைத்து விடும் என்று குறித்த அமைச்சர் அவர்கள் கூறி இருக்கின்றார்.
குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியும் மற்றும் அரசு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள் எனவும்அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் தமிழரசியல்வாதிகள் தம்முடன் கைகோர்ப்பார்கள் எனின் அதற்குரிய தீர்வு உடனடியாக கிடைக்கும் எனவும் மற்றும் அது குறித்து பலமான நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படும் எனவும் மேலும் தீர்வுகளை விரைவாக எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்து இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.