கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் மீற்க்கப்பட்ட மனித தலை!! விசாரணைகள் தீவிரம்..
இலங்கையின் பமுனுகம – பழைய அம்பலம என்னும் கடற்கரையில் உடலின்றிய நிலையில் மனித தலை மாத்திரம் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவலினை தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் குறிப்பிட்ட கடற்கரை பகுதியிலிருந்து குறித்த முண்டம் அற்ற தலைப்பகுதி மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் மற்றும் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பமுனுகம போலீசார் முன்னெடுத்து வருவதாகவும் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.
பமுனுகம கடற்கரையில் கரை ஒதுங்கி இருக்கின்ற உடல் பகுதி அற்ற நிலையில் தலை மாத்திரம் கொண்டவாறு மனித தலையானது குறித்து கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை அப் பிரதேச வாழ் மக்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும்.
மற்றும் இது குறித்து விசாரணைகளை பல்வேறு கோணங்களில் போலீசார் முன்னெடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.