வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டம்…
வடக்கு கிழக்கு மாவட்டங்களில் எதிர்வரும் இருபதாம் திகதி அன்று பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பினை வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பானது தற்போது கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
குறித்த கதவடைப்பு விடையம் தொடர்பாக மன்னாரில் அமைய பெற்றுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாத்திலே இது தொடர்பான கலந்துரையாடலானது நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து வடக்கு கிழக்கு முழுவதுமான போராட்டமானது எதிர்வரும் 20 ஆம் தேதி அன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்றும் இப் போராட்டத்திற்கு என பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புகளும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரான தமிழரசு கட்சியை சேர்ந்த செல்வம் அடைக்கல நாதன் அவர்கள் போன்ற பல முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.