இலங்கையின் பல பகுதிகளில் குண்டு வெடிக்கும் அபாயம் வெளியான பரபரப்பு தகவல்…
இலங்கையின் பல பகுதிகளில் அதிலும் விசேடமாக கொழும்பில் எதிர்வரும் நாட்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படும் என பிரபல ஊடகம் ஒன்று தற்போது செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச் செய்திணை தொடர்ந்து உடனடியாக விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மற்றும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கோரி கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவினையும் தற்போது பிறப்பித்துள்ளார்.
மேலும் நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளி ஒருவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்குறித்த கைதி ஒருவரினால் ஜன்னலுக்கு வெளியே வீசப்பட்ட சீட்டு துண்டு ஒன்றில் இலங்கையின் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு தாக்குதலுக்குரிய தகவல்கள் இருந்ததாகவும் குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டுக்காட்டியுள்ளது .
இதனை அடுத்தே கொழும்பில் உள்ள பல பகுதிகள் இவ்வாறான குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே இது குறித்து மக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க கோரி மக்களுக்கும் மற்றும் இது தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு போலீசாருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது .