இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் உரிமம் பெற்ற மதுபான சாலைகள் பூட்டு.. அதிர்ச்சியில் மதுபானபிரியர்கள்!!
தற்போது இலங்கை நாடு முழுவதும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அதாவது மூன்று 03. 10. 2023 ஆம் திகதி அன்று இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் காணப்படுகின்ற உரிமம் பெற்ற மதுபான சாலைகள் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இன்றைய தினம் அனைத்தும் மதுபான சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இந் நிகழ்வானது சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து பிரதேசங்களிலும் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மது ஒழிப்பு தினம் ஆனது இன்றைய நாள் அனுஷ்டிக்கப்படுகின்து.
இதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முகமாகவே இன்றைய தினம் மது ஒழிப்புக்காக மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரி ஒருவரே இலங்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக் குறித்த தீர்மானத்தை மீறி இலங்கையில் விற்பனையில் ஈடுபடுகின்ற அனைத்து மதுபான சாலை நபர்களுக்கும் மற்றும் மதுபான கடைகளுக்கும் எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.