World

விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் எட்டாவது கண்டம்…

தற்போது உலகில் சுமார் ஏழு கண்டங்கள் இருக்கின்றன இதனை அடுத்து விஞ்ஞானிகளினால் தற்போது புதிதாக எட்டாவது கண்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக் கண்டம் குறித்து விஞ்ஞானிகள் வியப்பில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இத் தகவலினை சர்வதேச ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது கண்டு பிடிக்கப்பட்ட கண்டத்துக்கு விஞ்ஞானிகளினால் ஜீலந்தியா (Zealandia) என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எட்டாவது கண்டமான ஜீலந்தியா 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாகவும் குறித்து புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடல் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளின் மாதிரி தரவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் இவ் எட்டாவது புதிய கண்டத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இவ் கண்டமானது நியூசிலாந்துக்கு அருகே அமைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

49 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட இக் கண்டமானது 94 சதவீதம் நீருக்கு அடியில் மூழ்கி இருப்பதாகவும் தெரிகின்றது .

ஜீலந்தியா கண்டமானது மடகாஸ்கர் தீவை போல ஆறு மடங்கு பெரியதாக இருக்கின்றது எனவும் புவியியல் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து நியூசிலாந்து போன்றசிறு சிறு தீவுகளும் எட்டாவது கண்டமான ஜிலேந்தியாவில் காணப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தற்போது உலக நாடுகளில் ஆசியா, ஐரோப்பா,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா ,அன்டார்க்டிக்கா , வட அமெரிக்கா ,தென் அமெரிக்கா என ஏழு கண்டங்கள் அமைந்துள்ளன.

இதனை அடுத்து இப்போது புதிய கண்டமான ஜிலந்தியாவும் எட்டாவது கண்டமாக அங்கீகரிக்கப்படும் என குறித்த விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்

Related Articles

Back to top button