நான்கு தமிழர்கள் கனடாவில் கைது!!! வெளியானது திடுக்கிடும் தகவல்…
கனடா நாட்டில் தற்போது நான்கு தமிழர்கள் உட்பட சுமார் ஏழு நபர்களை டொரண்டோ போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
இதில் இவர்கள் 7 பேரும் டொரண்டோவில் பதிவாகியுள்ள சுமார் 70 குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என போலீசார் தற்போது தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழு பேரில் சுமார் 4 தமிழர்கள் அடங்கியதாகவும் மற்றும் அதில் பெண் ஒருவரும் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாக இருக்கின்றது.
மற்றும் 29 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணும் மற்றும் 32 வயதான ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .
அவர்கள் முறையே கீர்த்தன் மங்களேஸ்வரன், கோபி யோகராஜா, மிலோஷா ஆரியரத்தினம், கஜன் யோகநாயகம் ஆகிய நான்கு தமிழர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் கனடாவின் டொரோண்டோவில் வாகன திருட்டு தொடர்பிலே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றும் இவர்களை விசாரித்த டொரோண்டோ போலீசார் ஏழு பேரில் 4 பேர் தமிழர்கள் என உறுதி செய்து இருக்கின்றனர்.
மற்றும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் நூற்றுக்கணக்கான டொலர் பணம் மற்றும் பல வாகனங்களும் அதனை தொடர்ந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றி உள்ளதாக டொரண்டோ போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்றும் குறித்த கைது செய்யப்பட்ட சந்தேகம் நபர்கள் Service Ontario எனப்படும் ஊழியர்களுடன் இணைந்து டொரண்டோ பகுதியில் வாகனத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது இவ்வாறு வாகன திருட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் நான்கு தமிழர்கள் பற்றிய பரவலான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.