பெண்களை ஏமாற்றிய ராணுவ வீரர்.. இலங்கையில் அம்பலமான உண்மைகள்…
இலங்கையின் வாதுவ பிரதேசத்தில் பெண்களை ஏமாற்றிய மற்றும் பாலியல் வன்கொடுமை அவர்களது பணம் நகை என அனைத்தையும் கொள்ளை அடித்து முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை இலங்கை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த ராணுவ வீரர் தான் போலீஸ் தலைமையகத்தில் சிரேஷ்ட போலீஸ் பரிசோதகர் என பொய்யான தகவல்களை கூறி குறிப்பிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் மசாஜ் சென்டர்கள் , facebook மற்றும் இணையதளம் வாயிலாக குறிப்பிட்ட பெண்களை அடையாளப்படுத்தி இவ்வாறு இவர் ஏமாற்றியுள்ளார்.
இவ்வாறு பெண்களை-ஏமாற்றிய ராணுவ வீரர் பண்டாரக மில்லனியப் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்போது தெரிய வந்துள்ளது.
மற்றும் இவர் சுமார் 53 வயதான நபர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொட்டாவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் முறைப்படி அமையவே இவ்வாறு குறிப்பிட்ட மோசடி செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் பெண்களை வாதுவ, மொரொன்துடுவ பகுதிகளில் அண்மித்து காணப்படுகின்ற பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் குற்றங்களை புரிந்ததாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
இவர் பெண்களிடம் தங்க நகைகளை திருடிய குற்றத்திற்காகவும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றும் திருடியதாக கூறப்படும் நகைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தற்போது போலீசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ராணுவ வீரரிடம் இருந்து ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணமும் , ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் தலைமை போலீஸ் பரிசோதகர் என்கிற போலியான அடையாள அட்டை என்பனவும் கிடைக்கப் பெற்றுள்ளது .
இலங்கையில் சில ராணுவ வீரர்கள் இவ்வாறு அப்பாவி பெண்களை உயர் பதவியில் இருப்பதாக கூறி ஏமாற்றி வருகிறதும் குறிப்பிடத்தக்கது.