World

சர்வதேசம் முன் இலங்கையை நிறுத்த வேண்டும் அமெரிக்க எம்பிக்களின் அதிரடியான அறிவிப்பு!!

அமெரிக்க நாட்டின் சுமார் 12 எம்பிக்கள் தற்போது அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சரைக்கு இலங்கை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். மேலும் குறித்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கையில் நடத்தப்பட்ட சித்திரவதைக்கு முரணான சர்வதேசம் உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையில் நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் இதன் போது அவர்கள் தமிழர்கள் எதிர்கொண்ட கொடூரமான மிகவும் வன்மையான சித்திரவதைகள் குறித்து தங்களது கடிதத்தில் விவரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்பட்ட அரச படைகள் மற்றும் ஏனைய அரசு அமைப்புகளினால் தமிழர்கள் மீது வன்முறை தாக்குதல் இடம் பெற்றது .

அதற்குரிய நீதியானது இது வரை காலமும் கிடைக்கப்படாத நிலையில் தற்போது அமெரிக்காவின் 12 அமைச்சர்களும் தங்கள் சார்பாக சர்வதேச முன் இலங்கையை நிறுத்த கோரி கடிதத்தை விரிவாக எழுதியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் உண்மையில் மனித உரிமைகள் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டது எனவும்.

இது தொடர்பாக மனித உரிமை மீறல்களினால் இலங்கையில் பல தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான வன்முறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் எதிரான தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையின் மீது அமெரிக்கா வெளிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கையை சர்வதேசம் முன் நிறுத்த வேண்டும் என 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர் .

Related Articles

Back to top button