World

சிங்கப்பூரின் அடுத்த ஜனாதிபதியாகும் இலங்கைத் தமிழன்….

சிங்கப்பூரின் ஜனாதிபதி தேர்தல் ஆனது இந்த மாதம் முதலாம் திகதி அளவில் நடைபெற்றது.

இதில் இலங்கை இன் வட மாகாணமான யாழ்ப்பாண மாவட்டத்தினை சேர்ந்த மற்றும் இந்தியா வம்சாவளியை பின்னணியில் கொண்டுள்ள மற்றும் இலங்கை தமிழர் பகுதியை பூர்வீகமாகவும் கொண்டுள்ள தர்மன் சண்முக ரத்னம் என்பவரே சிங்கப்பூரின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பூர்வீகமாகக் கொண்ட குறித்த தமிழரானவர் சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவர் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி வாகையினை சூடியுள்ளார்.

மேலும் சிங்கப்பூரில் 24.8 லட்சம் அதிகூடிய வாக்கு எண்ணிக்கையில் சுமார் 17.46 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று ஒன்பதாவது ஜனாதிபதியாக தற்போது பதவியேற்கவுள்ளார்.

இவரின் பதவியேற்கும் நிகழ்வானது நாளை வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

யாழ்ப்பாணம் ஊரெழுப்பகுதியை பூர்வீகமாக கொண்டவர் தான் தர்மன் சண்முகரத்தினம் அவர்கள்.

சிங்கப்பூரின்

மேலும் இவர் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் மற்றும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும் அண்மையில் துணை பிரதமராகவும் பதவினை வகித்து வந்துள்ளார்.

இவ்வாறு சிங்கப்பூரில் அதிக வாக்கு எண்ணிக்கையில் ஜனாதிபதி தேர்தல் வெற்றி பெற்று நாளை பதவியேற்றக உள்ள தர்மன் சண்முக ரத்தினம் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு என கேபினட் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button