லிபியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சுமார் 5300 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர்…
லிபியாவில் டெர்னா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பருக்கின் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் சேதத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் கடினமான சூழ்நிலைகளை கடந்து வருகின்றனர்.
கிழக்கு நகரத்தில் சுமார் 2 அணைக்கட்டுகள் உடைந்து மற்றும் மக்கள் வாழும் பிரதேசத்தில் அவர்களின் வீடுகள் முழுவதையும் வெள்ளம் அடித்து சென்றுள்ளது.
இதன் காரணமாக அங்கு இறப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
இப்போது வரை சுமார் 5300 பேர் இறந்துள்ளதாகவும் மேலும் சுமார் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான தகவல்கள் தற்போது அந் நாட்டு உள்ளூர் ஊடகங்களினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளப்பெருக்கின் மூலம் உயிர் பிழைத்தவர்கள் சாவின் விளிம்பு வரை சென்று தப்பி பிழைத்ததாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
மற்றும் அவர்களது குடும்பங்கள் முழுவதும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இதனால் ஆங்காங்கே இறந்த சடலங்களை மீட்பு பணியினரும் மற்றும் பொதுமக்களும் மீட்டெடுத்து வருகின்றனர்.
இப் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக சேதங்கள் காரணமாக பத்திரிக்கையாளர்கள் கூட அண்டை நகரங்களில் புலம் பெயர்ந்து இது தொடர்பான செய்திகளை திரட்டி வருவதாகவும் தெரிய வருகின்றது.
மேலும் அங்கு வாழும் குடிமக்கள் தங்களின் அன்புக்குரிய குடும்பத்தவர்களை இழந்து அனாதைகளாக நிற்கதியற்று நிற்கின்ற சம்பவம் தற்போது அரங்கேறி வருகின்றது.
மேலும் அப் பகுதியில் உள்ள அனைத்து விதமான பொருட்கள் மற்றும் மக்களும் மக்கள் மற்றும் அவர்களது உடமைகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
நகரப் பகுதியில் சுமார் 90000 பேர் வசித்து வந்த நிலையில் தற்போது சுமார் 10,000 இற்கும் அதிகமான நபர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் டெர்ணா பகுதியில் ஏராளமான மக்களும் நிவாரண பணியாளர்களும் உயிர் பிழைத்தவர்களை தேடி வருகின்றதாகவும் அங்கு அதிகமான மீட்புக் குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
பலர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் இதனால் அதீத அவல சத்தங்களும் மற்றும் சிறுவர்களின் அழுகையும் கேட்கின்றதாகவும் அந் நகரவாசிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இப் பேரழிவானது மனிதனால் மீட்டுக் கொண்டு வராத அளவிற்கு அதீத சேதங்களை உண்டு படுத்தியுள்ளது.
உடனடியாக லிபியா நாட்டின் அரசாங்கமானது அங்குள்ள மக்களுக்கு நிவாரணங்களை விமானங்கள் மூலம் கொண்டு இறக்கி உள்ளது.
இதன் போது அவர்கள் உரிய உணவு பொதிகளும் மற்றும் அவசர மருத்துவ பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
செஞ்சிலுவை சங்க குழுக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் லிபியாவில் தங்குமிடம் இல்லாமல் உணவு வசதி இல்லாமல் பருகுவதற்குரிய சுத்தமான தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாக மேலும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வருவதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.
மேலும் இந் நாட்டு அரசாங்கமானது இப்போது பேரழிவிற்க்கு தேவையான உதவிகளை சர்வதேச ரீதியில் கோரி உள்ளதாகவும் ஏனைய நாட்டு மக்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளது.