World

மிகவும் மோசமான தீ விபத்து 100 பேர் பலி 150 பேருக்கு காயம்…

நேற்றைய தினம் ஈராக்கில் உள்ளூர் நேரப்படி சுமார் இரவு 10. 45 மணி அளவில் திருமண மண்டபம் ஒன்றில் மிகவும் மோசமான தீ விபத்து சம்பவம் நடந்தேறி உள்ளது.

ஈராக்கின் இச் சம்பவம் ஆனது ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் இவ் விபத்தின் போது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனை அடுத்து 150 பேரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து தீ விபத்தானது குறிப்பிட்ட திருமண மண்டபத்தில் களியாட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்ட வானவேடிக்கையின் தீயினால் மண்டபத்தில் தீ ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மேலும் இத் தீ விபத்தின் போது குறித்த திருமண மண்டபத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த பிரதேசத்துக்கு விரைந்த ஈராக்கின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வந்ததாகவும் தெரிகின்றது.

இதனை அடுத்து உடனடியாக ஈராக்கிய பிரதமரானவர் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதற்கு உத்தரவினையும் பிறப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button