World

ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கினால் மூவர் பலி!

ஸ்பெயினில் இன்று பெய்த கன மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இவ் வெள்ளப்பெருக்கானது ஸ்பெயினில் ஆல்டியா டெல் ஃப்ரெஸ்னோவில் நடை பெற்றுள்ளது.

மேலும் இப் பகுதியில் சிவில் காவலர்கள் மற்றும் மீட்பு பணி குழுக்கள் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து மக்களை மீட்பதற்கு அவ்விடத்தினை சூழ குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இவ் வெள்ளத்தினால் மெட்ரோ ரயில் பாதைகள் மற்றும் ரயில் சேவைகளை உடனடியாக மூட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கு…..

மற்றும் திங்கட்கிழமை அன்று மத்திய நகரில் வெள்ளப்பெருக்கின் காரணமாக தஞ்சம் புகுந்து மாடி வீடுகளின் கூரையில் தங்களை பாதுகாத்துக் கொண்ட மக்களை மீட்பு குழுக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டெடுத்ததாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளது.

மேலும் கன மழையினால் உருவாகிய வெள்ளப்பெருக்கினால் சாலை ஓரங்கள் அனைத்தும் ஆறுகளாக மாறின.

இதில் சிக்குண்டு சுற்றி உள்ள கிராமப் பகுதியில் வாழ்கின்ற மூன்று பேர் இறந்து உள்ளனர்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை ஒரு சதுர மீட்டருக்கு 90 லிட்டர் மழை பெய்ததாக மழையினை பதிவு செய்துள்ளது அந்த நாட்டு வானிலை மையம்.

இறந்து போன மூவரில் போலீசார் ஒருவர் மீட்பு பணியில் ஈடுபட்ட போது இறந்து கிடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது நபர் இன்னொருவரை காப்பாற்ற சென்ற சந்தர்ப்பத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார் .

இறந்த 3வது நபர் சுமார் 50 வயது உடையவர் எனவும் மேலும் இவர் காணாமல் போய் உள்ளதாக தகவல் தெரிவித்தன.

இருப்பினும் இவரது சடலம் இன்று பிற்பகல் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட ஆற்றில் மிதந்து காணப்பட்டது.

மேலும் வெள்ளப்பெருக்கினால் அந் நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இவ் வார ஆரம்பத்தில் புயலானது கிட்டத்தட்ட இக் கிராமம் முழுவதையும் சூழ்ந்ததாகவும் தெரிய வருகின்றது. மேலும் நேற்றைய தினம் அதிக மழையும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் மற்றும் இன்றைய தினம் பெய்த கன மழையினாலே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .

சாலை நெடுகிலும் குப்பை தொட்டிகள் அடித்து செல்லப்பட்டன.

மேலும் தெருக்கள் தோறும் ஆறுகளாக மாற்றப்பட்டன, இவ் இதன் காரணமாக பல பாலங்களும் இடிந்து விழுந்ததாகவும் ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மக்களின் கார் போன்ற உடைமைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

அக் கிராம பகுதியில் குடியிருப்பு வாசிகள் அதிக மழையின் காரணமாக தங்கள் பயந்ததாகவும் மேலும் வீட்டுக்குள்ளே இருந்ததினால் பாதுகாப்பாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

டோலிடோ கிராமத்தின் அருகே பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.

மேலும் மார்டின் கிராமத்தின் தெற்கே உள்ள மண்டாவில் நீரினால் இழுத்து செல்லப்பட்டார் சுமார் 84 வயதுடைய ஆண் நபர் ஒருவரை தேடி வருவதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந் நாட்டு மக்களுக்கு தங்களது பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு நான் மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனை சரி பார்க்குமாறு அரசாங்கமானது மக்களை கூறி உள்ளது.

மற்றும் இன்றைய தினம் மழை வீழ்ச்சியின் அளவு குறையப்படும் எனவும் நம்ப படுகின்றது. இதனால் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் இருந்த எச்சரிக்கையின் அளவானது சற்று குறைந்து மஞ்சள் நிறத்துக்கு வந்துள்ளது.

மேலும் தற்போது ஓரளவுக்கு சேதங்களில் இருந்து மக்கள் மீண்டு வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Related Articles

Back to top button