கோவிட் 19 அடுத்த பரிமாணம் உஷார் மக்களே !!
கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் 2019 (COVID-19) முதன்முதலில் சீனாவின் வுஹானில் 2019 இல் அறிவிக்கப்பட்டது,
பின்னர் 1918 காய்ச்சல் தொற்றுநோய்க்குப் பிறகு ஐந்தாவது ஆவணப்படுத்தப்பட்ட தொற்று நோயாக உலகளவில் பரவியது.
செப்டம்பர் 2021 க்குள், கோவிட்-19 முதன்முதலில் கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 200 மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் இருந்தன என்று தகவல்கள் கூறுகின்றன .
மற்றும் 4.6 மில்லியனுக்கும் அதிகமான உயிர்கள் காவிட 19 தொற்றுக்கு இலக்காகி இழக்கப்பட்டு உள்ளன.
சில வாரங்களுக்குப் பிறகு, வேகமாகப் பரவிய கோவிட்-19 ஆனது 2020 ஜனவரி 30ஆம் தேதி, பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனப்படுத்தப்பட்டு ,
சர்வதேச ரீதியில் பொது சுகாதார அவசரநிலையாக WHO அறிவித்து இருந்தது .,
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) நாட்டில் COVID-19 நோயால் இறந்த முதல் நபரை உறுதிப்படுத்தியது.
அவர் வாஷிங்டன் மாநிலத்தில் வாழ்ந்த ஐம்பது வயதுடைய நபர்.
மார்ச் 7ஆம் தேதி, கோவிட்-19 பாதிப்பு 100,000ஐ எட்டியது.
சில நாட்களுக்குப் பிறகு, மார்ச் 11 அன்று, கோவிட்-19 WHO ஆல் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது. COVID-19 சீனாவில் மட்டுமே இருக்கும் ஒரு கடுமையான பிரச்சனையாக இருந்து,
கிட்டத்தட்ட ஒரே இரவில் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக மாற்றப்பட்டது.
கோவிட் 19 அடுத்த பரிமாணம் ஆன கோவிட்-19 எரிஸ்
இந் நிலையில் இப்போது தான் கோவிட்-19 இன் தார்பரியம் குறைந்து உள்ளது எனலாம் .ஆனால் இப்போது கோவிட்-19 இன் அடுத்த பரிமாணமான கோவிட் 19 எரிஸ் தொற்று ,பிரிட்டனிலே இத் தொற்று இப்போது ஆரம்பம் ஆகி பரவி வருகின்றது .
இது விஞ்ஞான ரீதியாக EG 5.1 என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. எரிஸ் ஒரு வகையான ஓமிக்ரான் வைரஸ் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட நபர் ஏற்கனவே கொரோனா வைரஸினால் தாக்கப்பட்டவர் என்றும் தகவல் குறிப்பிடுகின்றது .
இன் நிலையில் பிரிட்டனின் சுகாதார நிபுணர்கள் தனி நபர் இடைவெளியை பின் பற்றுவது மிகவும் முக்கியம் என மக்களுக்கு அறிவித்து உள்ளது , கொரோனாவின் போது நாம் மேற்கொண்ட நடைமுறைகளை கடைபிடிப்பது மிகவும் சிறந்தது என்றும் கூறுகின்றது .
இவ் எரிஸ் வைரஸ் கொரோனா வைரஸ்ஸை காட்டிலும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை ஆம் .
ஜூலை மாதம் 3 ஆம் தேதி 2023 இல் இந்த வைரஸ் முதலில் கண்டுப் பிடிக்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.
மேலும் ஆசியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவியிருப்பதாக தெரியவந்து உள்ளது . எரிஸ் வைரஸ் தொடர்பான ஆய்வுகள் தொடந்து நடை பெறுகின்றன.
இறுதியாக பிரிட்டனில் திரையிடப்பட்ட பர்பீ, ஓப்பன் ஹெய்மர் திரை படங்களுக்கு மக்கள் அதிகமானோர் சென்றிருந்ததே இவ் வைரஸ் அதிகமா பரவுவதற்கு காரணம் ஆகும் என்று அவ் நாட்டு சுகாதார துறை அறிவித்து உள்ளது.
எவ்வாராயினும் கொரோனா போல் இந்த வைரஸ் அதிவேகம் கொண்டு பரவலாம் என நம்பப்படுகிறது , எனவே மக்கள் அனைவரும் விழிப்புடன் செயற்ப்படுவோம் .