World

ஹரியானா வன்முறை சம்பவம் !! ஊரடங்கு …

ஹரியானா வன்முறை சம்பவதினால், ஹரியானா மாநிலத்தில் நூஹ், ஃபரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்களிலும்,

குர்கான் மாவட்டத்தின் சோஹ்னா, பட்டோடி மற்றும் மனேசர் ஆகிய மூன்று துணைப் பிரிவுகளிலும் ஆகஸ்ட் 5 ம் திகதி வரை மொபைல் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன .

ஹரியானா மாவட்டத்தில் நடப்பது என்ன ?

நூஹ், டாருவில் உள்ள வார்டு எண் 13 இல் உள்ள இரண்டு மசூதிகளை தீ வைத்த சம்பவம் நடைபெற்று உள்ளதாகவும் , அதற்கான பின்புலங்களை அறிவதற்காக விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று இருப்பதாகவும்

போலீஸார்அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர். மற்றும் ,நூஹ், டாருவில் உள்ள வார்டு எண் 13 இல் ஊரடங்குச் சட்டம் காலை 10 மணி முதல் அமுலாகி பின் பிற்பகல் 1 மணி வரை நீடிக்கப்பட்டு 1மணிக்கு பின்னர் ஊரடங்கு நீக்கப்பட்டதுடன்,

இடை நிறுத்தி வைக்கப் பட்ட இணையம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிகமாக மீட்டமைக்கப்படிருந்தது.

நேற்று புதன்கிழமை மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது ,

நூஹ், இல் வன்முறையைத் தூண்டுவதில் சமூக ஊடகங்கள் முக்கியப் பங்கினை ஆற்றியதாகவும் கூரினார் ,

மேலும் ஜூலை மாதம் 21ம் திகதி முதல் சமூக ஊடககங்களில் நடைபெறும் செயல்பாடுகளைக் கண்காணிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு கண்காணித்து கொண்டு இருந்ததாகவும் கூறினார்.

முதல்வர் மனோகர்லால் கட்டார் என்பவர் நேற்று மேலும் கூறுகையில்,

மேலும் நான்கு நிறுவன மத்தியப் படைகளைக் கோரி உள்ளார் நான்கு மேலும் இந்திய ரிசர்வ் பட்டாலியனின் ஒரு பட்டாலியனும் ,

வன்முறையால் பாதிக்கப்பட்ட நூஹ்வில் ஈடுபடுத்தப்படுவார் என்றார் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் .

ஹரியானா வன்முறை

மற்றும் ஹரியானா வன்முறை இல் நூஹ் நகரில் திங்கள்கிழமை நடந்த மோதலில் இருந்து மொத்தம் 116 பேர் கைது செய்யப்பட்டு 90 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் கட்டார் கூறினார்.

மேலும் இவர் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் . சமூக வலைதளங்களில் ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிட கூடாது எனவும் கூறினார் .இது வரை 83 எப் ஐ ஆர் பதிவுகள் பதியப்பட்டுள்ளன .

இவ் ஹரியானா வன்முறை சம்பவம் ஆனது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான மோதலே ஆகும் .

மூன்று நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற இம் வன்முறை மோதலிலே ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் இரண்டு “ஹோம் காவலர்கள்” அடங்குவர், அவர்கள் கலவரங்கள் மற்றும் பொது இடையூறுகளைக் கட்டுப்படுத்த காவல்துறைக்கு உதவுகிறார்கள் ஆவர் . பல போலீசார் உம் காயமடைந்தனர்.

நூஹ் இல் உள்ள , 55 வயதான சத்யபிரகாஷ் கார்க்என்பவர் இவ்வன்முறை குறித்து கூறுகையில் ,

திங்கட்கிழமை மாலை தனது இனிப்புக் கடை முஸ்லிம் ஆண்களின் ஒரு கும்பலால் சூறையாடப்பட்டதாகக் கூறி தனது இனிப்புக் கடைக்கு வெளியே சோகமாக அமர்ந்திருந்தார்.

“நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்,” என்றும் அவர் தரையில் சிதறிக் கிடக்கும் உணவையும் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் சைகையில் காட்டின்னார்.

வன்முறையின் போது ஏற்பட்ட பயத்தை நினைத்துப் பார்க்கையில் இன்றும் தனக்கு சிலிர்க்கிறது என்றும் கூறினார்
மேலும் தெரிவிக்கையில்

“இதைச் செய்தவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை, இதை நடக்க அனுமதித்த அதிகாரிகள் மீது தான் எனக்கு கோபம்” என்று அவர் கூறினார் .

Related Articles

Back to top button