லண்டனில் சிறுவனால் கத்திக்குத்திக்கு இலக்கான சிறுமி… நாட்டை உலுக்கிய கொலை சம்பவம்!!
லண்டனில் தனது பள்ளிக்கு செல்லும் வழியில் 15 வயது ஆன சிறுமி ஒருவரை 17 வயதான சிறுவன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவமானது தற்போது பிரித்தானியாவில் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவமாக பார்க்கப்படுகின்றது.
இந் நிலையில் லண்டனில் தெற்கு பகுதியில் உள்ள வெல்லஸ்லி பகுதியில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டருக்கு ஆன்மித்த பகுதியில் குறித்த பதினைந்து சிறுமியானவர் தனது பள்ளிக்கு செல்லும் வழியில் 17 வயதான சிறுவன் ஒருவன் குறித்த சிறுமியை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார்.
இவ்வாறு கத்திக்குத்திக்கு இலக்கான அச் சிறுமி பரிதாபகரமாக அவ்விடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த பிரதேசத்துக்கு விரைந்து சென்று லண்டன் போலீசார் மற்றும் அவசர குழுவினர்கள் குறித்த சிறுமியை காப்பாற்ற எத்தனித்த போதும் குறித்த சிறுமி சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டார்.
மேலும் குறித்த சிறுமியானவர் பேருந்து ஒன்றுக்கு அருகிலே நின்று கொண்டிருந்த போது இச் சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளதினால் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் பயணிகளும் அச் சிறுமியை காப்பாற்ற ஓடி வந்திருக்கின்றனர்.
இருப்பினும் மற்றும் சில நபர்கள் கொலை செய்த சிறுவனை நோக்கி ஓடி உள்ளனர். இருப்பினும் குறித்த சிறுவன் தப்பிவிட்டார்.
இச் சம்பவமானது லண்டன் நேரப்படி 8.30 மணி அளவில் நடைபெற்றிருக்கின்றது.
இதனை அடுத்து விரைந்த போலீஸ் உத்தியோகத்தர்களினால் சுமார் 9.20மணி அளவில் குறித்த கொலையாளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியும் கொலையினை புரிந்த சிறுவனும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் எனவும் போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
மேலும் இக் கொலை சம்பவத்திற்குரிய காரணமானது இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரியப்படுள்ளது .
இக் கொலை சம்பவமானது லண்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக சம்பவமாக இருக்கின்றது.