கனேடிய பிரதமர் கல்யாண வாழ்க்கையில் பிரிவு!!
கனேடிய பிரதமரின் கல்யாண வாழ்க்கையில் பிரிவு என ஆகஸ்ட் மாதம் 2 ம் திகதி புதன் கிழமை கனடாவின் பிரதமர் ஜேம்ஸ் ட்ரூடோ அறிவித்திருந்தார்.
பிரதமர் அவர்கள் 2006 இல், லிபரல் கட்சியின் இளைஞர் புதுப்பித்தல் பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2 ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பாபினோவின் சவாரியைப் பிரதிநிதித்துவப்படுத்த 2008 கூட்டாட்சித் தேர்தலில் பிரதமர் ஜேம்ஸ் ட்ரூடோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 2009 இல் இளைஞர்கள் மற்றும் பன்முக கலாச்சாரத்திற்கான லிபரல் கட்சியின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி விமர்சகராக இருந்தார், அடுத்த ஆண்டு அவர் குடியுரிமை மற்றும் குடியேற்றத்திற்காக விமர்சித்தார். 2011 இல், அவர் இடைநிலைக் கல்வி மற்றும் விளையாட்டுக்கான விமர்சகராக நியமிக்கப்பட்டார்.
ட்ரூடோ ஏப்ரல் 2013 இல் லிபரல் கட்சியின் தலைமையை வென்றார் மற்றும் 2015 ஃபெடரல் தேர்தலில் தனது கட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார், மூன்றாவது இடத்தில் இருந்த லிபரல்களை 36 இடங்களிலிருந்து 184 இடங்களுக்கு நகர்த்தினார்,
இது கனடிய கூட்டாட்சித் தேர்தலில் ஒரு கட்சியின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான அதிகரிப்பு ஆகும்.
தற்போது கனடாவின் பிரதமராக இருந்தும் வருகின்றார் . கனேடிய பிரதமரின் மனைவி பெயர் ஷோபி . சோஃபி ட்ரூடோ ஒரு முன்னாள் மாடல் ஆகவும் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.
ட்ரூடோ மற்றும் ஷோபி அக்டோபர் 2004 ம் ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் . அடுத்த வருடம் மே மாதம் 28ம் திகதி 2005 அன்று மாண்ட்ரீலின் செயிண்ட்-மேடலின் டி’ஓட்ரீமாண்ட் தேவாலயத்தில் திருமணம் உம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உம் உள்ளனர்: இரண்டு மகன்கள் உம் ஒரு ஒரே பெண் பிள்ளையும் உள்ளனர் .மூத்த பையன் பெயர் சேவியர் இவர் 2007 ம் ஆண்டில் பிறந்தார்,
அடுத்ததாக பெண் பிள்ளை பெயர் எல்லா-கிரேஸ் இவர் 2009 ஆண்டில் பிறந்தார், மற்றும் இளைய பையன் பெயர் ஹாட்ரியன் இவர் 2014 இல் பிறந்தார்.
ட்ரூடோ மற்றும் ஷோபி இருவரும் தற்போது பிரிந்துள்ளதாக ஆஃபீசியல் ஆக பிரதமர் அறிவித்து உள்ளார். இவர்கள் திருமணம் செய்து 18 வருடங்கள் ஆகி உள்ளதும் குறிப்பிட தக்கது .
“பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்கு” பிறகு அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக இன்ஸ்டா இல் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இருவரும் தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் இருவரும் சட்டப்பூர்வ பிரிவினை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் ட்ரூடோ மற்றும் ஷோபி இருவரும் சேர்ந்து இருப்பதை குறைவாகவே காணக்கூடியதாக இருந்தது . மற்றும் அதிகாரப் பூர்வ பயணங்களில் கூட பிரதமருடன் அரிதாகவே பயணம் செய்தார்.
இருப்பினும் கடந்த மாதம் ஒட்டாவாவில் நடந்த கனடா தின நிகழ்வுகளில் இருவரும் பொதுவில் ஒன்றாகக் கலந்து கொண்டனர் .
மேலும் சோஃபியும் பிரதமரும் தங்கள் மூன்று குழந்தைகளை உம் பாதுகாப்பான, அன்பான மற்றும் அமைதி நிறைந்த சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர்” என்று ட்ரூடோவின் அலுவலகத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.