சூறாவளியின் காரணமாக பாதிக்கப்பட்ட தாய்வான்!!
தாய்வான் பகுதியில் ஏற்பட்டுள்ள சூறாவளியின் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இவ் சூறாவளியின் பெயர் ஆனது ஹகுய் என அழைக்கப்படுகின்றது .
இந் நிலையில் சூறாவளியின் காரணமாக தாய்வான் பிரஜைகள் பலரும் காயம் அடைந்து உள்ளதாக அந் நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளது.
இந்த சூறாவளி ஆனது தாய்வான் பகுதியினை முற்றாகத் தாக்கியதாகவும் மேலும் கடலோரப் பகுதியிலுள்ள கிராமங்கள் அனைத்தும் இதனால் சேதமடைந்து உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இச் சூறாவளியினால் இது வரை 40க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர், 4000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச் சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் அதிக மழை என்பவற்றின் மூலம் தாய்வான் மலைப் பகுதிகளிலும் மற்றும் தாழ்வான பகுதிகளிலும் மரம் விழுந்து முரிந்ததில் சுமார் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் இதன் போது எவ்வித உயிர் ஆபத்துகளும் மற்றும் உயரிய கட்டமைப்பு சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக் குறித்த புயல் ஆனது சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதாகவும் அந்நாட்டு பருவ காலநிலை மாற்றங்கள் அளவிடும் மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தாய்வான் பகுதியில் பலரும் மின்சாரம் இன்றி இருளிலே வாழ்க்கையை தற்போது கழித்து வருகின்றனர்.
இருப்பினும் சுமார் 16,000 பேரைக் கொண்ட கிராமத்தில் ஏற்பட்டுள்ள மின் தடங்களினை தொடர்ந்து அந் நாட்டு மின் பாதுகாப்பு நிலையம் உடனடியாக செயல்பட்டு மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.