இளநரைக்கு உடனடி தீர்வு… பயன் அளிக்கும் வீட்டு மருத்துவம்…
தற்போது அதிகளமான ஆண்கள் மற்றும் பெண்கள் இளநரை பிரச்சனை கொண்டுள்ளனர். இவர்கள் இளநரைக்கு என செய்யாத மருத்துவங்களே இருக்காது.
அதிலும் இளம் வயதில் முடி நரைப்பதனால் பலர் மன உளைச்சலுக்கும் ஆளாவதற்குரிய சந்தர்ப்பங்கள் நம் தற்சமயம் அதிகமாக இருப்பதனை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
இந் நிலையில் சிறு வயதிலேயே இளநரை ஏற்படுவதை பலர் பாரிய பிரச்சனையாக எடுத்துக்கொண்டு உடனடியாக முடியை கருப்பாக்குவதற்கென செயற்கையான முறைகளை கையாளுகின்றனர்.
இருபினும் அவைகள் நினைத்தளவிற்கு திருப்தியளிப்பதில்லை.
இளநரை முடியை இயற்கையாகவே கருப்பாக மாற்றக்கூடிய முறைகள் இருக்கின்றது.
நாம் அன்றாடம் சமயலிற்க்கு பயன்படுத்தும் பொருட்களை கொண்டே இளநரையை வேரோடு இல்லாதொழிக்கலாம் .
இளநரைக்கு தீர்வு….
அவ் வகையில் குறிப்பாக வெல்லம் மற்றும் வெந்தயத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இயற்கையாகவே இளநரை ஆனது கருப்பாக மாறும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மற்றும் வெந்தயமானது இயற்கையாகவே முடியின் ஆரோக்கியத்துக்கு மிகவும் பங்களிக்கின்ற ஒன்றாக செயல்படுகின்றது.
அவ் வகையில் வெல்லத்துடன் வெந்தயத்தினை பயன்படுத்தி வந்தால் ,அதன் பயன் இரட்டிப்பாக்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது .
அதன் அடிப்படையில் வெந்தயத்தை அரைத்து பொடி செய்து அதனை வெல்லத்துடன் கலந்து தினமும் காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால் இளநரைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
அந்நிலையில் இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் ஏனைய முடிகள் இளநரையாக மாறுவது நின்று விடுவதுடன், ஏற்கனவே மாறிய வெள்ளை முடியும் மீண்டும் கருப்பாக மாறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.