Life Style

இந்த 3பொருட்களை உணவில் அதிகம் சேர்த்தால் மாரடைப்பு ஏற்படுமா??

இன்றைய நவீன உணவு பழக்கத்தினால் பல்வேறுபட்ட புதுப் புது நோய்கள் உடம்பில் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றது. இந் நிலையில் இந்த மூன்று பொருட்களையும் உணவில் அதிக அளவில் சேர்த்தால் மாரடைப்பு வருவதற்கு உரிய வாய்ப்புகள் அதிகம் இருப்பது ஆக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிகப் படியான சர்க்கரை மற்றும் அதிகப் படியான உப்பு மேலும் ஆரோக்கியம் அற்ற கொழுப்புகள் ஆகியன நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் இலகுவில் மாரடைப்பு நம்மை ஆட்கொண்டு விடும் .

ஆரம்பத்தில் எமது உணவு பழக்கமானது ஆரோக்கியமானது ஆகவும் மற்றும் சத்துள்ளதும் ஆக அமைந்திருந்தது.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் உணவு பழக்கமானது முற்றிலும் முரணானதாகவும் மேலே வெறுக்கத்தக்கதாகவும் அமைந்துள்ளது .

சாக்லேட்கள்,ஃபாஸ்ட்ஃபுட்,அதிகளவானஉப்புதன்மைகொண்டஉணவுகள்,எண்ணெயில் பொறித்த உணவு வகைகள் என்பனவே இக் கால சந்ததியினர் அதிகம் உண்டு வருகின்றனர்.

இதனாலே இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து விடுகிறது. பாட்டி வைத்தியம் இருந்த கால கட்டங்களில் ஆரோக்கியமான பச்சை மரக்கறிகள் பச்சை காய்கறிகள் மற்றும் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்.

ஆனால் அதிலிருந்து முற்றிலும் வேறொரு பாணியில் தற்போது உள்ள இளம் சமுதாயத்தினர் நகர்ந்து வருகின்றனர்.

இதயத்திற்கு தீங்கு பயக்கும் பொருட்கள்

நமது உடலுக்கு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்புகள் தேவைதான் ஆயினும் இதனது அளவு கூடும் போதே எமது உடலில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் வந்து சேருகின்றது .

அவ் வகையில் இதனது அதிகரிப்பு காரணமாக பிரஷர், ஹார்ட் அட்டாக், சிறுநீரக செயலிழப்பு, அல்சர், கிட்னி ஸ்டோன்ஸ், ஆகியன விரைவில் உடலை பாதிக்கின்றன.

உண்மையில் ஆரோக்கியமான உணவு முறை என்பது சமநிலையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட் கொள்ளுவதே ஆகும் .

இப்போதெல்லாம் பாக்கெட்டுகளில் வருகின்ற உணவுகளையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

இவ்வாறான உணவுகளிலேயே அதிகமான சீனி அதிகளவான உப்புத் தன்மை இருப்பது யாவரும் அறிந்ததே இருப்பினும் இவ் உணவு பொருட்களையே அதிகம் விரும்பி உண்பதினால் அளவிற்கு அதிகமான சீனியின் தன்மை உப்பின் அளவு என்பன எமது உடலில் அதிகரிக்கின்றன .

சிறுவர்கள் விரும்பி குடிக்கும் சோடாக்களில் அதிகளவான சீனி அளவு உள்ளது எனவும் அதிலே மூன்று விதமான சீனியின் அளவை குறிக்கும் சின்னங்கள் இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாது சோடாக்களை வாங்கி அருந்தும் சிறுவர்கள் எதிர் வரும் காலங்களில் மாரடைப்பினால் சீக்கிரம் பாதிக்கப்படலாம்.

எவ்வளவு தான் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் பார்த்து பார்த்து உப்பின் அளவை கொழுப்பின் அளவை குறைவாக உள்ளது என்று எடுத்துக் கொண்டாலும் ,

ஏதேனும் ஒரு ரூபத்தில் அதிகளவான அதிகளமான சில உடலுக்கு ஒவ்வாதவற்றையும் பெற்றுக் கொள்கிறோம்,

மேலும் இப்போதெல்லாம் மரக்கறிகள் பழங்கள் கூட பாக்கட்களில் அடைக்கப்பட்டு வருகின்றன உண்மையில் இவ்வாறான பொருட்களை அறவி ஒதுக்க வேண்டும்.

பிரெஷ் ஆக இருக்கும் உணவுகளிலே அதிகளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகவும் ,

பிரெஷ் உணவுகளில் இருந்தே முழுமையான ஊட்டச்சத்துக்களை நாம் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.

இந்த

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்டு இருக்கின்ற உணவுகள்,

உண்மையில் முழுமையான ஊட்டச்சத்துக்களை கொண்டதாக இருக்க மாட்டாது இதனால் பல்வேறுபட்ட நோய்கள் உடலில் ஏற்ப்பட்டு விடுகின்றது . எ

ப்போதும் ஃப்ரஷ் ஆக இருக்கும் மரக்கறிகள் மற்றும் பழங்களை சமைத்து உண்பதையே பழக்கப் படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் சக்கரை ,உப்பு ,ஆரோக்கியமற்ற கொழுப்புகளை இந்த 3 பொருட்களை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளாமல் எமது இதயத்தினை பாதுகாத்துக் கொள்வோம் .

Back to top button