முதியவர்கள் இருவர் மயங்கிய நிலையில் மரணம்…. யாழில் நடந்த சம்பவம்!!!
யாழ்ப்பாணப் பகுதி இரு வெவ்வேறான இடங்களில் முதியவர்கள் இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமானது தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
இச் சம்பவமானது நேற்றைய தினம் புதன்கிழமை அன்று 13.12.2023 ம் திகதி இடம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
சங்கானை பகுதியில் ஆலை ஒன்றில் காத்திருந்த இரட்ணம் அருளானந்தம் எனும் முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக அருகாமையில் இருந்த மக்கள் அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இவர் பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இந் நிலையில் நேற்றைய தினம் பலாலி பகுதியில் சைக்கிளில் பயணத்தை மேற்கொண்டிருந்த செல்வம் சிவானந்தம் எனும் முதியவர் வீதியில் மயங்கி விழுந்த நிலையில் வழிப்போக்கர்கள் அவரை மீட்டு தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.
இந் நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தற்போது தகவலினை தெரிவித்துள்ளது.
மற்றும் இவர் புன்னாலைக் கட்டுவான் வடக்கை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாக இருக்கின்றது.
இவ்வாறு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இரு முதியவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் செய்யப்பட்டு வருகின்றது.