Srilanka News

கடவுச்சீட்டு மோசடி…. கைதான இந்திய தரகர்….

அண்மை காலங்களாக கடவுச்சீட்டு மோசடியானது பாரிய அளவில் நாடாளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்றது.

இந் நிலையில் இலங்கையர்களுக்கு போலி கடவுச்சீட்டுகளை விநியோகித்த இந்திய முகவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் போலியான ஆவணங்களை கொடுத்து கடவுச்சீட்டுகளை சுமார் 28 பேருக்கு பெற்று கொடுத்த ஆறு நபர்கள் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றும் இவர்களுள் தபால் ஊழியர் ஒருவரும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மற்றும் போலீசாரக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலினை அடிப்படையில் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுவதாக இவ்வாறு 6 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.

12ம் திகதி அன்று இரவு வேளையில் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் இவ்வாறு போலியான கடவுச்சீட்டுக்கள் கைமாற்றப்பட்ட போது குறித்த சம்பவ இடத்தில் மூன்று பேர் கைதாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய போலீசார் தற்போது தகவலினை வெளியிட்டுள்ளனர்.

இதனை அடுத்து தமிழகத்தில் புலம்பெயர்ந்து வசிக்கும் சுமார் 28 இலங்கையர்களுக்கு மோசடி முறையிலான கடவுச்சீட்டுகள் பெற்று கொடுக்கப்பட்டுள்ள அமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் கடவுச்சீட்டு மோசடி வழக்கில் தற்போது ஆறு நபர்கள் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button