புலம்பெயர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றும் நாடு!! செய்தி குறித்து வெளியான தகவல்…
புலம்பெயர்ந்தவர்கள் பலரை தன்னுடைய நாட்டை விட்டு அதாவது தனது நாட்டின் தலைநகர் பகுதியை விட்டு ஏனைய பிரதேசங்களுக்கு தற்போது இடம் மாற்றம் செய்து வருகின்றது பிரான்ஸ் .
பிரான்சின் தலைநகர் பகுதியான பாரீஸில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் வீதியோரங்களிலும் மற்றும் பாலங்களுக்கு கீழாகவும் தங்களுடைய அன்றாடம் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு நாளுக்கு நாள் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை பாரீஸில் அதிகரித்து வந்துள்ளது.
மேலும் இவ்வாறு வீடில்லாமல் மற்றும் சாலையோரங்களிலும் பாலங்களுக்கு கீழாகவும் தங்கி இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் பிரான்சின் தலைநகர் பகுதியில் இருந்து பிரான்சின் வேறு இடங்களுக்கு தற்போது இடமாற்றம் செய்து வருகின்றது பிரான்ஸ் அரசு .
அந்த வகையில் குறித்த இடமாற்றமானது வாரம் ஒன்றுக்கு 50 தொடக்கம் 150 வரையான புலம் பெயர்ந்தவர்கள் இடமாற்றம் செய்வதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு திடீரென்று குறித்த புலம்பெயர் நபர்களை பிரான்ஸ் அரசு தலைநகரில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்குரிய காரணமாக அடுத்த வருட 2024 ஆம் ஆண்டிற்க்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பாரிஸில் நடத்தப்படுவதே ஆகும் என பல தரப்பினரும் தற்போது தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் இது குறித்து அரசாங்கம் மறுப்பு தெரிவிக்கின்றது மேலும் இதனை அடுத்து இதற்குரிய உண்மை காரணம் இனிவரும் காலங்களில் பிரான்ஸ் அரசினால் வெளியிடப்படும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.