நேற்று பதிவான கோவிட் மரணம்…. அச்சத்தில் பொது மக்கள்!!!
நேற்று பதிவான கோவிட் மரணம் குறித்து தற்போது பொது மக்கள் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சுமார் ஒரு வருடங்கள் கழித்து கோவிட் மரணமானது தற்போது நாட்டில் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் குறித்த மரணமானது கம்பளையிலே நேற்று இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
சுமார் 65 வயது உடைய நபரே இவ்வாறு கோவிட் குறித்து மரணம் அடைந்திருக்கின்றார்.
குறித்த மரணமானது கோவிட் மரணம் என கண்டி தேசிய வைத்தியசாலையானது தற்போது உறுதிப்படுத்தி உள்ளது.
மற்றும் குறித்த சம்பவமானது நேற்றைய தினம் நடந்தேறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபரிடம் கோவிட் 19க்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும் இதனை அடுத்து குறித்த நபரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் குறித்த உயிரிழந்த நபர் ஆனவர் கோவிட் தொற்றினாலே உயிரிழந்துள்ளார் என்பதனை மருத்துவ வட்டாரங்கள் தற்போது உறுதி செய்துள்ளது.
சுமார் ஒரு வருடங்கள் கழித்து பதிவான இம் முதல் மரணம் குறித்து பொதுமக்கள் பலரும் அச்சத்தில் இருப்பதோடு சுகாதாரத்துறையானது பொது மக்களுக்கு கோவிட் காலங்களில் பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்ற கோரியும் அறிவுரைகளையும் விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.