Srilanka News

முக பூச்சுகளை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…

தற்போது இலங்கையில் அனேகமானவர்கள் முக பூச்சுகளை குறைவான விலையில் கொள்வனவு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

மற்றும் பொது மக்கள் இவ்வாறான முக பூச்சுகளை அதிகம் விரும்பி கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

இந் நிலையில் இலங்கையின் தலைநகர் பகுதியான கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் காலாவதியான முக பூச்சுகளை தலா 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்ற மோசடி கும்பல் ஒன்றினை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தற்சமயம் கண்டுபிடித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த மோசடி கும்பலிடம் இருந்து அநேக காலாவதியாகும் முகப் பூச்சுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பகுதியில் முகப்பூச்சுகள் காலாவதி ஆகும் பட்சத்தில் அங்கு சென்று அழிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதை அறிந்த மோசடி கும்பல்கள் அதனை கொண்டுவந்து கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் விற்பனை பொருளாக மாற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நுகர்வோர்களினால் நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற முரண்பாடுகளின் அடிப்படையில் புறகோட்டை பகுதியில் காலாவதியான வாசனை திரவியங்களும் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்வதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

இந் நிலையில் நுகர்வோர் அதிகார சபை சபையின் சுற்றுவளைப்பின் போது குறிப்பிட்ட கடைகளில் முகப்பூச்சுகளும் மற்றும் முக அழகு சாதன பொருட்கள் காலாவதியான வாசனை திரவியங்களும் வைக்கப்பட்டுள்ளன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவைகள் அனைத்தும் குறைந்த விலையில் விற்கப்படுள்ளமையும் தெரிய வந்துள்ளது .

இந் நிலையில் குறித்த அதிகாரிகளினால் வாசனை திரவியங்களும் முகப்பூச்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இவ்வாறு காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததற்காக அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவும் செய்வதாக குறித்து அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

Related Articles

Back to top button