covid-19 காலப்பகுதியிலான நடைமுறைகளை அமல்படுத்த சுகாதாரத்துறை மக்களுக்கு விடுத்த அவசர எச்சரிக்கை…..
தற்போது இலங்கை நாட்டில் பரவி வருகின்ற டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல்வேறு விதமான வைரஸ் நோய்களுக்காக இலங்கை அரசாங்கம் ஆனது இலங்கையின் சுகாதாரத்துறை ஆனது covid-19 காலப்பகுதியிலான நடைமுறைகளை தற்போது மீண்டும் கொண்டு வருவதற்குரிய எச்சரிக்கையினை மக்களுக்கு விடுத்துள்ளது.
இதனால் குறித்த வைரஸ்களில் இருந்து பொது மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் சுகாதாரத் துறை தற்போது தெரிவித்திருக்கின்றது.
மற்றும் இவ்வாறு வைரஸ் தொற்றுகளுக்கு உள்ளாகும் நபர்களிடமிருந்து ஏனையவருக்கு பரவுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதாகவும்,
எனவே covid-19 காலப்பகுதியிலான சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுவது மக்களுக்கு நன்மை பயக்கும் என சுகாதாரத் துறை தற்போது தெரிவித்துள்ளது.
மற்றும் இவ்வாறு பரவி வருகின்ற வைரஸ்கள் உண்மையில் கோவிட்-19 வைரஸ் உடன் சம்பந்தப்பட்டவையா என்பது இதுவரை காலமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும் இது குறித்தான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனை முறையாக கூற முடியாது உள்ளது எனவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கின்றது.
மற்றும் இரண்டு நாட்களுக்கு மேலாக ஒருவரின் உடலில் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும்,
மற்றும் இரத்த பரிசோதனை செய்து கொண்டு குறித்த நோயை பற்றிய முழு தெளிவையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத் துறை தற்போது மக்களுக்கு எச்சரிக்கையினை விடுத்திருக்கின்றது.
அதே போல் மருத்துவரின் ஆலோசனையின்றி எவ்வித மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வோண்டாம் எனவும் தற்போது சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கின்றது.
மற்றும் நாட்டின் நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் ஆங்காங்கே நிரம்பி வழிகின்ற வெள்ள நீரின் மூலம் அனேக நோய்கள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் குறித்து கவனம் …
எனவே இந் நாட்களில் வைரசினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையினை நாடும் சிறுவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதாகவும் மற்றும் சுவாச நோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்காக தினமும் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.
இதே போல் இப் பண்டிகை காலங்களில் முடிந்தளவு சிறுவர்களை சன நெரிசலான இடங்களுக்கு அழைத்து செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் சுகாதார துறையானது பெற்றோர்களுக்கு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
முடிந்தவரை எதிர்வரும் விடுமுறை காலங்களில் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் இருக்கின்றது என சுகாதாரத் துறையானது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் எச்சரிக்கையினையும் விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் அண்டை நாடான இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் உடன் தொடர்பான திரிபடைந்த வைரஸ் ஒன்று அடையாளம் காணப்பட்டு கேரளா பகுதியில் குறித்த வைரஸ் ஆனது தொற்று குள்ளாகின்றது.
எனவே வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்யும் இலங்கை பிரஜைகள் இது குறித்து எச்சரிக்கையாக இருப்பதோடு தனி மனித நடைமுறைகளையும் மற்றும் கோவிட் 19 காலப்பகுதிகளில் பின்பற்றப்பட்டிருந்த மாஸ் மற்றும் அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றையும் உற்று நோக்குமாறும் சுகாதாரத்துறை தற்போது அறிவித்திருக்கிறது.
மற்றும் இன்றைய நாட்களில் இலங்கை நாட்டில் அதிகரித்து வருகின்ற சுற்றுலா பயணிகள் காரணமாகவும் வெவ்வேறான வைரஸ் வகைகள் நம் நாட்டிற்குள் வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும்,
எனவே முடிந்த அளவு இயலுமான வரை நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் அனைவருக்கும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.