விமானத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்… வெளியான முக்கிய செய்தி…
சவுதி அரேபியாவின் ரியாத் எனப்படும் இடத்திலிருந்து இலங்கையின் சர்வதேச விமான நிலையம் ஆன காட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்ட விமானத்தில் இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் அதே விமானத்தில் பயணம் செய்த இந்திய பிரஜை ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதான செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை பெற்று வெகுவாக பரவி வருகின்றது.
இந் நிலையில் குறித்த சம்பவமானது நேற்று காலை 7.20 மணி அளவில் சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்திலே இச் சம்பவம் நடை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.இவ்வாறு எட்டு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களை செய்த நபரானவர் விமான ஊழியர்கள் இனால் கைது செய்து செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணப்படும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
குறித்த செய்தியினை தொடர்ந்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளம் ஊடாக தெரிவித்து வருகின்றனர்.
ஓடும் விமானத்தில் இவ்வாறான அநாகரீக செயல்களை புரிகின்ற நபர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் எனவும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது .