கனடா செல்லும் இலங்கையர்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து…. புதிய குடியேற்ற வாசிகளுக்கு எச்சரித்த கனேடிய அரசு……
இலங்கையில் இருந்து கனடா செல்லும் இலங்கையரின் சனத் தொகையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.
இது குறித்து தற்போது கனேடிய அரசு ஒரு சில எச்சரிக்கை தகவல்களை விடுத்துள்ளது. அதிலே கனடாவில் புதிதாக குடியேறுகின்ற நபர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் நோக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் அந் நாட்டு அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது.
இந் நிலையில் இலங்கையில் காணப்படுகின்ற அதீத பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் மற்றும் பொருட்களின் அதீத விலைவாசிகளினாலும் பலவிதமான பிரச்சனைகளின் அடிப்படையில் இலங்கையின் தமிழர் தாயகம் மட்டும் இன்றி இலங்கை முழுவதும் உள்ள இலங்கை பிரஜைகள் கனடா ( கனடா செல்லும் ) மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்றும் ஏனைய வெளிநாடுகளுக்கும் குடியேறுவதற்குரிய முயற்சிகளில் தற்போது அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு கனடாவில் குடியேற இருக்கும் பிற நாட்டவர்களுக்கு கனேடிய அரசு விடுத்த எச்சரிக்கை ஆனது பேரிடியாக அமையப் போகின்றது என்றே கூறலாம்.
புள்ளி விபரவியல் ஆய்வு…
அந்த வகையில் கனேடிய அரசானது தற்போது வெளியிட்டு உள்ள புள்ளி விபரவியல் ஆய்வில் சுமார் 70 லட்சம் கனேடியர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டினியுடன் இருந்ததான தகவல்களை வெளியிட்டுள்ளது.
மற்றும் இது கடந்த 2022 ஆம் ஆண்டிலே கனேடிய மக்களின் சதவீதத்தில் 18 வீதமான குடும்பங்கள் உணவு பற்றாக்குறைய எதிர்நோக்கி உள்ளதான விபரங்களை புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இவர்கள் தரமான அல்லது போதுமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை பெற்றுக் கொள்வதில் சிரமத்தினை எதிர்நோக்கியதன் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மற்றும் 2021 ஆம் ஆண்டிலேயே சுமார் 16 வீதமான கனடா வாழ் குடும்பங்கள் உணவு பற்றாக்குறை இனை எதிர்நோக்கி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதன் காரணமாக பல்வேறு விதமான போஷாக்கு பிரச்சனைகளும் மற்றும் மனநல பிரச்சனைகளும் அதனை தொடர்ந்து பல்வேறு விதமான நோய் அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளதாகவும் இவ் ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது.
மற்றும் இதன் காரணமாக கனடாவின் சுகாதார துறையும் பல்வேறு விதமான இன்னல்களையும் பல்வேறு விதமான சவாலான சூழ்நிலைகளை கையாண்டதாகவும் குறித்த ஆய்வில் தெரிய வருகின்றது .
இதனைத் தொடர்ந்து கனடா மக்களின் இறப்பின் காலமானது முன்கூட்டியே தெரிய வழிவகுக்கிறது எனவும் குறித்த திணைக்களம் கூறியுள்ளது.
இதன் காரணமாகவே அரசாங்கமானது புதிதாக கனடாவில் குடியேற இருக்கின்ற நபர்களை தற்போது எச்சரித்து வருகின்றது.
மற்றும் அதிகளவான மக்கள் இலங்கையில் இருந்து கனடா நோக்கி குடிப்பெயர இருக்கின்றவர்கள் இவ்வாறான விடயங்கள் குறித்து மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் இது குறித்து சற்று எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
தற்போது கனடாவிற்குள் புதிதாக குடியேற இருக்கும் நபர்களுக்கு கனடா அரசு தெரிவித்து இருக்கின்றது.
மற்றும் கனடாவில் இது மாத்திரம் இன்றி பல்வேறு விதமான இடப்பற்றாக்குறைகளும் ஏற்படுவதினால் பலர் பல்வேறு விதமான இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை வாழ் நபர்கள் மட்டும் இன்றி வெளிநாட்டில் வாழ்கின்ற நபர்களும் தற்போது பல்வேறு விதமான இன்னல்கள் எதிர் நோக்கி அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.