Srilanka News

மின்சார கட்டணம் செலுத்தாது அரசாங்கத்தை ஏமாற்றும் அரசியல்வாதிகள்… அம்பலமான ரகசியங்கள்!!

இலங்கை நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்ற மின்சார கட்டணத்தின் காரணமாக பல்வேறு பாமர மக்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கு மத்தியில் மின்சார கட்டணத்தை செலுத்துகின்ற இச் சந்தர்ப்பத்தில் இக் குறித்த செய்தியானது தடுக்கிடம் செய்தியாக மக்கள் மத்தியில் அதிகமாக பரவப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் இலங்கையில் மின்சாரகட்டணத்தை முறையாக செலுத்தாமல் சுமார் 50 அரசியல்வாதிகள் அரசாங்கத்தை ஏமாற்றி வருவதான தகவல்களை இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் அவர்கள் தற்போது தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு 50 அரசியல்வாதிகளில் ஒருவர் தென் மாகாணத்தினைச் சேர்ந்தவர் எனவும் அவர் வெஷாக் பண்டிகையினை கோலாகலமாக நடத்தியதன் காரணமாக சுமார் 11 லட்சம் ரூபாய் மின்சாரகட்டணத்தை மின்சார-சபைக்கு வழங்காமல் மின்சாரசபையினை ஏமாற்றி வருவதாக குறித்து செயலாளர் மேலும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

குறித்த அரசியல்வாதிகள் சம்பந்தமான தகவல்கள் இதுவரையும் வழங்கபடவில்லை .. காரணம் அவர்கள் அரசியல்வாதிகள் என பயந்து வழங்கப்படவில்லை என்பதும் அவர் அறிவித்து இருக்கின்றார்.

இருப்பினும் இவர்கள் குறித்தான தகவல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.

இவ்வாறு நாட்டிலே பல்வேறு அரசியல்வாதிகள் முறையான வகையில் மின்சாரகட்டணத்தினை செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இருப்பினும் பாமர மக்களிடையே சிறு தொகை மின்சார கட்டணம் செலுத்த தவறும் பட்சத்தில் கூட அதிபார தூரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் இந் நாட்டிலே இவர்களை இவ்வாறு அரசியல்வாதிகள் என இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் இதுவரை காலமும் எடுக்கப்படவில்லை எனவும்,

இது உண்மையில் அநீதியான விடயங்களில் ஒன்றாகும் எனவும் மற்றும் இது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் இது குறித்தான பரவலான தகவல்கள் உலாவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button